பக்கம் எண் :

36எட்டுத் தொகையும் தமிழர் பண்பாடும்

வருந்தியவள் வசை மொழியும் கூறத் தொடங்கினாள். அவள் தன் பெண்ணைப் பற்றி வசைகூறவில்லை; அவளைக் கூட்டிச் சென்ற ஆண்மகனைப் பற்றியும் வசை கூறவில்லை; பிறகு யாரை வெறுக்கின்றாள் என்பதுதான் இங்கே உற்றுணர வேண்டியதாகும்.

‘‘நான் என் அருமை மகளைப் பிரிந்து வருந்துவதைப் போல என் மகளை அழைத்துப் போனவனுடைய தாயும் வருந்துவாளாக’’ என்பதே அவளுடைய வசைமொழி. இவ்வாறு நினைப்பதும் சொல்வதும் பெண்களின் இயற்கை.

‘‘புலியினிடம் அகப்படாமல் தப்பிப் பிழைத்த கலைமான், தன் பெண் மானைத் தன்னிடம் வருமாறு ஆண் குரலால் அழைக்கின்ற காட்சியையுடையது பாலை நிலம். புதுமையும் வலிமையும் பொருந்திய வில்லையுடைய வாலிபன் என் மகளை அவ்வழியே அழைத்துக்கொண்டு போனான். அதை நினைக்குந்தோறும் என் கண்கள் நீரைச் சிந்துகின்றன. அவனுடைய தாயும் என்னைப் போலவே தன் மகனை நினைக்கும் போதெல்லாம் கண்ணீர் சிந்திவருந்தும் துன்பத்தை அடைவாளாக.

நினைத்தொறும் கலிழும் இடும்பை எய்துக!
புலிக்கோள் பிழைத்த கவைக் கோட்டு முதுகலை,
மான்பிணை அணைதர, ஆண்குரல் விளிக்கும்,
வெம்சுரம், என்மகள் உய்த்த
வம்பு அமை வல்வில் விடலைதாயே’’                              (பா. 373)

இப்பாடல் துக்கமடைந்த ஒரு பெண்ணின் உள்ளத்தை அப்படியே எடுத்துக் காட்டுகின்றது.

அன்பே அடிப்படை

காதலனையும் காதலியையும் ஒன்றாகப் பிணைத்து வைப்பது அன்புதான். அவர்கள் ஒருவர்மீது ஒருவர் அன்பு.