பக்கம் எண் :

சாமி. சிதம்பரனார்37

கொள்ளாவிட்டால் இன்பமுற மாட்டார்கள்; அவர்களுடைய இல்லறமும் நல்லறமாக நடவாது அன்பிருந்தால்தான் அவர்களில் ஒருவர் தவறு செய்தாலும் மற்றவர் அத்தவற்றைப் பொறுத்துக் கொள்ளுவர். இவ்வுண்மை அகப் பொருள் நூல்கள் பலவற்றிலும் காணப்படுகின்றது.

பரத்தை வீட்டுக்குச் சென்றிருந்த கணவன் மேல் மனைவி மிகவும் கோபத்துடன் இருந்தாள். அவனைக் கண்டவுடன் அவள் கோபம் மாறிவிட்டது. அன்பே இதற்குக் காரணம்.

‘‘வாழ்க தோழியே! நான் இன்று, நெறி தவறியவனைக் கண்டவுடன் கோபித்துக்கொள்ள வேண்டும் என்றும், அவனை வீட்டுக்குள் நுழையாமல் தடுக்க வேண்டுமென்றும் எழுந்து சென்றேன். பின்னர் அவனுடைய பழைய அன்பை நினைத்து அவனிடம் இரக்கம் கொண்டு திரும்பிவிட்டேன்.

அம்ம வாழி தோழி! யான் இன்று
அறன் இலாளன் கண்ட பொழுதில்
சினவுவென் தகைக்குவென், சென்றெனென்;
பின்நினைந்து இரங்கிப் பெயர் தந்தனனே’’                         (பா. 118)

இப்பாடல் காதலி கணவனிடம் கொண்டிருக்கும் அன்பை வெளிப்படுத்துகிறது. பண்டைத் தமிழ்ப் பெண்களின் சிறந்த குணத்தை இப்பாடல் மூலம் காணலாம்.

ஆண்கள் பரத்தையர்கள் வீடுகளுக்குப் போகும் குணமுடையவர்களாயிருந்தாலும் இல்லாளிடம் எப்பொழுதும் அன்புடன்தான் இருந்தனர். இவ்வுண்மையைக் காட்டும் பாடல்கள் பல உண்டு.

‘‘சிறந்த செல்வப் பொருளைத் தேடுவதிலே ஆவல் கொண்டு உன்னைத் துறந்து மலைப்பாதைகளிலே பிரிந்து சென்றேன். சென்றபோது அவ்வழிகள் மாளாத நீண்ட வழிகளாக இருந்தன. அதன் பின் அழகிய