பக்கம் எண் :

38எட்டுத் தொகையும் தமிழர் பண்பாடும்

ஆபரணங்களையுடைய உன்னை நினைத்துக்கொண்டு நான் திரும்பி வந்தேன். திரும்பி வரும்போது பாலை நிலத்திலே உள்ள அவ்வழிகள் மிகவும் அண்மையாக இருந்தன.

அரும்பொருள் வேட்கையம் ஆக, நின்துறந்து
பெரும்கல் அதரிடைப் பிரிந்த காலைத்,
தவநனி நெடிய வாயின; இனியே
அணியிழை உள்ளி யாம் வருதலின்
அணிய வாயின சுரத்திடை ஆறே’’                                (பா. 359)

இது, பொருள் தேடச் சென்ற தலைவன் திரும்பிய பின், தன் அன்பை வெளியிட்டுக் கூறியது. இப்பாடல் காதலன் தன் காதலியிடம் கொண்டிருந்த அன்பை விளக்கிக் காட்டுகிறது.

கணவனும் மனைவியும் என்றும் இணைபிரியாத அன்புடையவர்களாக வாழ்ந்தால்தான் இல்லறம் சிறக்கும். அவர்களும் இன்பமடைவார்கள். இவ்வுண்மையை மேலே காட்டிய இரண்டு பாடல்களும் விளக்கி நின்றன.

சிறந்த ஊர்கள்

பண்டைத் தமிழ்ப் புலவர்கள், அவர்கள் வாழ்ந்த காலத்திலிருந்த சிறந்த ஊர்கள் பலவற்றைத் தங்கள் பாடல்களிலே குறிப்பிட்டிருக்கின்றனர். ஐங்குறுநூற்றிலும் இத்தகைய பாடல்கள் பலவற்றைக் காணலாம்.

‘‘வேனிலா யினும் தண்புனல் ஒழுகும்
தேனூர்                                                        (பா. 54)

கோடைக்காலமானாலும் குளிர்ந்த நீர் குறையாமல் ஓடிக்கொண்டிருக்கும் தேனூர்’’.

‘‘கரும்பின் எந்திரம் களிற்றெதிர் பிளிற்றும்
தேர்வண் கோமான் தேனூர்                                       (பா. 55)

கரும்பைப் பிழிந்து சாறெடுக்கின்ற எந்திரங்கள் மதங்கொண்ட யானைகளின் பிளிற்றலை அடக்கும்படி