பக்கம் எண் :

சாமி. சிதம்பரனார்45

இப்பாடலைப்பற்றி வழங்கும் கதை ஒன்றுண்டு பாண்டிய மன்னன் ஒரு நாள் தன் மனைவியுடன் சோலையில் வீற்றிருந்தான்; உல்லாசமாகப் பொழுது போக்கினான். அவன் மனைவியின் கூந்தலிலிருந்து நறுமணம் வந்தது. அது அவன் உள்ளத்தைக் கவர்ந்தது. அந்த மணத்திற்கு எந்த மலரின் மணமும் ஈடாகாது என்று எண்ணினான். தன் காதல் மிகுதியால், அந்த நறுமணம் அவள் கூந்தலின் இயற்கை மணம் என்று நினைத்தான். தன் கருத்தை அமைத்துப் பாடுவோர்க்கு ஆயிரம் பொன் பரிசளிப்பதென்று முடிவு செய்தான். தன் முடிவை அனைவருக்கும் அறிவித்தான். ஆயிரம் பொன்னடங்கிய முடிப்பைச் சங்க மண்டபத்திலே கட்டித் தொங்கவிட்டான்.

தருமி என்பவன் மதுரைக் கோவிலின் அர்ச்சகன். தனக்கு அப் பொன்முடிப்பு கிடைக்கவேண்டுமென்று சொக்கநாதரை வேண்டிக் கொண்டான். மறுநாள் அவன் பூசைக்குப் போனபோது சொக்கநாதர் பீடத்திற்கு அடியிலே இப்பாடல் ஒரு ஓலையில் எழுதப்பட்டுக் கிடந்தது. தருமி இப்பாடலை எடுத்துக்கொண்டு வந்த சங்கத்தார் முன்னிலையிலே படித்தான். இப்பாடலின் கருத்தே தன் கருத்தென்று பாண்டியன் ஒப்புக்கொண்டான். புலவர்களும் பாடலைப் பாராட்டினர். தருமிக்குப் பொற்கிழி பரிசாயிற்று.

தருமி பொற்கிழியை எடுக்கச் செல்லும்போது நக்கீரர் தடுத்தார். ‘‘பாட்டிலே சொற்குற்றம் இல்லை; ஆனால் பொருட்குற்றம் உண்டு. கூந்தலுக்குச் செயற்கை மணந்தான் உண்டு. இயற்கை மணம் இல்லை’’ என்று கூறினார்

தருமியால் இதற்குத் தக்க விடையிறுக்க முடியவில்லை, தடுமாறினான். இறைவனை வேண்டினான். பின்னர் சொக்கநாதரே ஒரு புலவர் போல வந்து நக்கீரருடன் வாதிட்டார்; கற்புடைய மகளிரின் கூந்தலுக்கு இயற்கை மணம்