52 | எட்டுத் தொகையும் தமிழர் பண்பாடும் |
யிருப்பதை நமக்குத் தெளிவாகத் தெரியும்படி விளக்கிய பிறகுதான் அவர் பொருள்தேடப் புறப்பட்டுப் போனார். அவர் வாழ்க; என்றும் எமனைப்போலத் திரிந்து கொண்டிருக்கின்ற-கொல்லுகின்ற வேற்படையையுடைய மறவர்கள், வழியிலே ஒளிந்திருந்து வழிச் செல்வோரைக் கொன்று பொருள் பறிப்பார்கள். முடை நாற்றத்தை விரும்பும் பருந்துகள், அப்பிணங்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும். இத்தகைய பழமையான துன்பத்தையுடையது அந்த நீரற்ற வழி. இவ்வழியாகத்தான் அவர் பொருள் தேடப் போயிருக்கின்றார். உள்ளது சிதைப்போர் உளர்எனப்படாஅர், இல்லோர் வாழ்க்கை இரவினும் இளிவு, எனச் சொல்லிய வன்மை தெளியக்காட்டிச், சென்றனர்; வாழி, தோழி! என்றும் கூற்றத்தன்ன, கொலைவேல் மறவர், ஆற்றிருந்து அல்கி, வழங்குநர்ச் செகுத்த படுமுடைப், பருந்து பார்த்திருக்கும் நெடுமூது இடைய நீரில் ஆறே’’ (பா. 283) இப்பாடல் பொருள்தேடப் போயிருக்கும் தன் காதலனைப் பற்றித் தன் தோழியிடம் ஒரு தலைவி கூறுவதுபோலப் பாடப்பட்டது. இது ஒவ்வொருவரும் தமது முயற்சியினாலேயே பொருளீட்டி வாழவேண்டும் என்னும் கருத்தை வலியுறுத்துவதாகும். இதுவே பண்டைத் தமிழர் கொள்கை. இப்பாடலில், பாலைநில மக்கள் வறுமை காரணமாகக் கொலையும் களவும் செய்து உயிர் வாழ்கின்றனர் என்ற செய்தி கூறப்படுவது குறிப்பிடத்தக்கது. வறுமை, கொலையிலும் களவிலும்கூடக் குதிக்கத் தூண்டும் என்பதையும் இதனால் அறியலாம். காதல் மணம் ஒரு பெண்; ஒரு ஆண். இருவரும் உருவத்திலும் பருவத்திலும் ஒத்தவர்கள். ஒரு மலைச்சாரலிலே |