இவ்வாறு உழைக்காலம். பலன் கருதாமல் உழைத்தால்தான் பரமபதம் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடையவர்கள் இவ்வாறு உழைக்கலாம். இவர்களுடைய உழைப்பிலும் கூடப் பரமபதம் என்ற குறிக்கோள் உண்டு. வாழ வேண்டும் என்ற கருத்துடையவர்கள் யாரும் கணக்கு பார்க்காமல் உழைக்க மாட்டார்கள்; முயற்சி செய்ய மாட்டார்கள். இந்த உண்மையை ஒரு பாடல் விளக்கிக் காட்டுகின்றது. ‘‘மிகுந்த இருள் சிதையும்படி மின்னி-குளிர்ச்சியாக வீழ்கின்ற மழைத் துளிகளை இனிமையாகச் சிந்தி-முறையாகக் குறுந்தடியால் அடிக்கப்படுகின்ற முரச வாத்தியத்தைப் போல் முழங்கி-இடியிடித்து-மழை பெய்து-இனி நீ வாழ்வாயாக பெரியமேகமே! ‘‘நாமோ ’’செய்யத் தொடங்கிய வினையை வெற்றியுடன் முடித்துவிட்டோம்’’ என்ற பெருமையுள்ள மனத்துடன், இவளுடன் சேர்ந்து, குவளையாகிய சிறிய இதழ்களையுடைய மலர் மணம் வீசும் தூய மெல்லிய கூந்தலையுடைய இவளது மெல்லிய படுக்கையிலே மகிழ்ந்திருக்கிறோம்’’ இப்பொருளமைந்த பாடலே கீழ் வருவது. தாழ் இருள் துமிய மின்னித், தண்என வீழ் உறை இனிய சிதறி, ஊழின் கடிப்பிடு முரசின் முழங்கி, இடித்திடித்துப் பெய்தினி வாழியோ பெருவான்! யாமே செய்வினை முடித்த செம்மல் உள்ளமோடு, இவளின் மேவின மாகிக், குவளைக் குறுந்தாள் நாள் மலர் நாறும் நறுமென் கூந்தல் மெல் அணையேமே’’ (பா270) இது, பொருளீட்டுவதற்குச் சென்ற ஒரு தலைவன் தன் காரியத்திலே வெற்றி பெற்று வந்தான்: வந்த பின் தன் |