பக்கம் எண் :

58எட்டுத் தொகையும் தமிழர் பண்பாடும்

குறுந்தொகையிலே பல புலவர்களின் பெயர்கள் காரணப் பெயர்களாகக் காணப்படுகின்றன. அவர்களுடைய பாடல்களில் அமைந்திருக்கும் சொற்றொடர்களே அவர்கள் பெயர்களாக அமைந்திருக்கின்றன.

‘‘செம்புலப் பெயல் நீரார்’’ என்பது ஒரு புலவர் பெயர். இவருடைய செய்யுளில் ‘‘செம்புலப் பெயல் நீர்போல’’ (பா. 40) என்ற சொற்றொடர் காணப்படுகின்றது.

‘‘அணிலாடு முன்றிலார்’’ என்பவர் ஒரு புலவர். ‘‘அணிலாடு முன்றில்’’ (பா. 41) என்னும் தொடர் இவர் செய்யுளில் காணப்படுகின்றது.

‘‘நெடு வெண்ணிலவினார்’’ என்பவர் ஒரு புலவர். ‘‘நெடு வெண்ணிலவே’’ (பா. 47) என்ற தொடர் இவர் பாடலில் காணப்படுகின்றது.

‘‘மீனெறி தூண்டிலார்’’ என்பவர் ஒரு புலவர். ‘‘மீனெறி தூண்டிலின்’’ (பா. 54) என்ற தொடர் இவருடைய பாடலில் காணப்படுகின்றது.

‘‘விட்ட குதிரையார்’’ என்பவர் ஒரு புலவர். ‘‘விட்ட குதிரை’’ (பா. 74) என்ற தொடர் இவருடைய பாடலில் காணப்படுகின்றது.

‘‘காலறி கடிகையார்’’ என்பவர் ஒரு புலவர். ‘‘காலறி கடிகை’’ (பா. 267) என்ற சொற்றொடர் இவருடைய பாடலிலே காணப்படுகின்றது.

‘‘ஓரில் பிச்சையார்’’ என்பவர் ஒரு புலவர். ‘‘ஓரில் பிச்சை’’ (பா. 277) என்ற தொடர் இவருடைய பாடலில் காணப்படுகின்றது.

‘‘குப்பைக்கோழியார்’’ என்பவர் ஒரு புலவர். ‘‘குப்பைக் கோழி’’ (பா. 305) என்ற தொடர் இவருடைய செய்யுளிலே காணப்படுகின்றது.