64 | எட்டுத் தொகையும் தமிழர் பண்பாடும் |
ஒரு மனிதனுடைய சிறந்த செல்வம் எது என்பதை ஒரு நறறிணைப்பாட்டு எடுத்துக்காட்டுகின்றது. தமிழரின் சிறந்த பண்பாட்டை விளக்குகின்றது அப்பாடல். ‘‘அதிகார தோரணையிலே பேசுவதும், விரைந்து செல்லும் வாகனங்களிலே ஏறிச் செல்வதும் செல்வம் அன்று; தாம் செய்த செயலின் நல்ல பயனையே சான்றோர் செல்வம் என்று சாற்றுவர். தன்னைக் கண்டவர்களின் துன்பம், தன்னைக் கண்டவுடனே அஞ்சி ஓடும்படியான தன்மையுடன், அவர்களிடம் இரக்கம் காட்டுவதாகிய செல்வமே சிறந்த அழியாத செல்வமாகும். நெடிய மொழிதலும், கடிய ஊர்தலும் செல்வம் அன்று; தம்செய் வினைப்பயனே சான்றோர் செல்வம் என்பது; சேர்ந்தோர் புன்கண் அஞ்சும் பண்பின் மென்கண் செல்வம், செலவம் என்பதுவே. ’’ (பா. 210) விருந்தினர்ப் பேணல் விருந்தோம்புதலில் தமிழர்கள் தலைசிறந்தவர்கள். தமிழ் இலக்கியங்கள் எலலாவற்றிலும் தமிழர்களின் இச்சிறந்த பண்பைக் காணலாம். இல்லறத்திலே வாழ்வோர்க்குரிய கடமைகளில் ‘‘விருந்துபுரத்தல்’’ என்பதைச் சிறந்த கடமையாக அற நூல்கள் குறிக்கின்றன. இந்த அற நூல்களின் முறையையே பண்டைத் தமிழர்கள் பின்பற்றி வந்தனர். விருந்தினர் என்றால் உறவினர் என்று இக்காலத்தினர் நினைக்கின்றனர். உறவினர் வேறு; விருந்தினர் வேறு. முன்பின் அறியாத புதியவர்களுக்கே விருந்தினர் என்று பெயர். புதியவர்கள் எவராயினும் சரி, எந்நாட்டினராயினும் சரி, எம்மொழியினராயினும் சரி, அவர்களை வரவேற்று உபசரிப்பது தமிழர் பண்பு. |