76 | எட்டுத் தொகையும் தமிழர் பண்பாடும் |
ஆர்க்காடு பண்டைக் காலத்திலே சோழ மன்னர் ஆட்சியிலே யிருந்தது. (பா. 227) இருப்பை என்னும் ஊர் நீர் வளம் நிறைந்தது. பகைவர்களை அடக்கிய ஒரு சிறந்த வீரனுடைய ஊர் அது. (பா. 260) குன்றூர் என்பது ஒரு சிறந்த ஊர். பழமையான வேளிர்குடியைச் சேர்ந்தவர்கள் அவ்வூரிலே வாழ்ந்தனர். (பா. 280) ஊனூர் என்பது ஒரு சிறந்த ஊர். அவ்வூரிலே பாணர்களையெல்லாம் பாதுகாத்து வந்த வள்ளல் ஒருவன் வாழ்ந்தான். அவன் போரிலே சிறந்த வீரன். (பா. 300) முள்ளூர் என்பது சிறந்த புகழுடைய நகரம். அந்நகரிலே ஆரியர்கள் நிறைந்திருந்தனர். (பா. 170) நன்னன் என்பவன் ஒரு சிறந்த வள்ளல். அவன் கொண்கான நாட்டிலே வாழந்தவன். வளமுடைய பல குன்றுகள் அவனுக்குச் சொந்தமாக இருந்தன. (பா. 391) பாண்டியன் நெடுஞ்செழியன் என்பவன் தலையாலங்கானம் என்ற ஊரிலே பகைவர்கள் அஞ்சும்படி அமர்ந்திருந்தான். இவன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன். (பா. 387) சோழன் ஒருவன் குட்டுவன் என்னும் சேரனுடைய நகரத்தை அழித்தான். பகலிலே அந்நகரத்தைத் தீயினால் சுட்டெரித்தான். இவை போன்ற பல வரலாற்றுக் குறிப்புகள் நற்றிணையிலே காணப்படுகின்றன. |