தமிழ் நாட்டிலே மலைகளிலே தவசிகள் பலர் வாழ்ந்தனர். அவர்கள் நீண்ட சடைகளை வளர்த்திருந்தனர். நீராட மாட்டார்கள். அழுக்கடைந்த உடம்புடன் தவம் புரிந்து கொண்டிருப்பார்கள். பாணர் சேரிகளில் எப்பொழுதும் இசை முழக்கம் கேட்டுக் கொண்டே யிருக்கும். இவை போன்ற இன்னும் பல பழக்க வழக்கங்களையும் காணலாம். பண்டைத் தமிழர்களின் பண்பாட்டைக் காண நற்றிணைப் பாடல்கள் பேருதவி புரியும். ஐந்திணை ஒழுக்கங்களை நல்ல முறையிலே நவிலும் நூல் நற்றிணையாகும். |