82 | எட்டுத் தொகையும் தமிழர் பண்பாடும் |
முதல் நூற்றிருபது பாடல்கள் களிற்றியானை நிரை. நூற்று இருபத்தொன்று முதல் முந்நூறு முடிய உள்ள நூற்றெண்பது பாடல்கள் மணிமிடை பவளம். முந்நூற்று ஒன்று முதல் நானூறு வரையில் உள்ள நூறு பாடல்கள் நித்திலக்கோவை. தொகுப்பாசிரியர் இந்த நானூறு பாடல்களையும் ஒரே நூலாகத் தொகுத்தவர் உருத்திரசன்மர் என்னும் புலவர். மதுரை உப்பூரி குடிகிழான் மகனார் உருத்திரசன்மர் என்பது இவருடைய முழுப்பெயர். இறையனார் அகப்பொருளுக்கு நக்கீரனார் செய்த உரையே சிறந்த உரையென்று தீர்ப்பு கூறியவர் இவர்தான். இவர் முருகனுடைய அவதாரம்; ஊமை; ஐந்து வயதிலேயே நுண்ணறிவு படைத்த அருந்தமிழ்ப் புலவராய் விளங்கினார். ஊமையாயினும் காது கேட்கும். இறையனார் அகப்பொருளுக்குப் பல புலவர்கள் உரை யெழுதியிருந்தனர். அவர்கள் உரை ஒவ்வொன்றையும் படித்துக் காட்டும்போது, நக்கீரர் உரைக்குத்தான் தலையசைத்துப் புன்முறுவல் காட்டினாராம். இவ்வாறு இவரைப்பற்றிய வரலாறு ஒன்று வழங்குகின்றது. உக்கிரப் பெருவழுதி என்னும் பாண்டியனே இந்நூலைத் தொகுக்கும்படி செய்தவன். இவன் கடைச் சங்கத்தைக் காப்பாற்றி வந்தவன். இவனும் சிறந்த தமிழ்ப் புலவன். அகநானூற்றின் இருபத்தாறாவது பாடல் இவன் பெயரில் உள்ளது. இந்நூலின் சிறப்பு அகநானூற்றுக்கு ஒரு தனிச் சிறப்புண்டு. இந்நூற்பாடல்கள் ஐவகை நிலங்களின் இயற்கைத் தோற்றங்களை அழகுற எடுத்துக்காட்டுவதோடு நின்றுவிடவில்லை. ஐவகை நிலத்து |