பக்கம் எண் :

84எட்டுத் தொகையும் தமிழர் பண்பாடும்

அளவு அவைகள் அவ்வளவு விரிவாக இல்லை. இதுவே இந்நூலின் தனிச்சிறப்பாகும்.

ஐவகை நிலங்களின் தன்மை; அங்கே நடக்கும் நிகழ்ச்சிகள்; அந்நிலங்களின் இயறகைத் தோற்றம்; ஆகியவைகளை அகநானூற்றுப் பாடல்களிலே விளக்கமாகக் காணலாம்.

காதல் மணம்

முன் பின் அறியாத ஒரு ஆணும் பெண்ணும் திடீரென்று ஒருவரோடு ஒருவர் சந்திக்கின்றனர். இருவரும் மணமாகாதவர்கள். ஒத்த பருவமும், ஒத்த உருவமும், ஒத்த நிலைமையும் உடையவர்கள். இருவர் கண்களும் ஒன்றுபடுகின்றன. உள்ளத்தாலும் ஒன்றுபடுகின்றனர். பின்னர் இருவரும் இரவிலும் பகலிலும் அடிக்கடி சந்தித்து அகமகிழ்கின்றனர். இவர்களுடைய சந்திப்புக்குத் தோழி துணை செய்வாள். இந்த நிகழ்ச்சிக்குக் களவுமணம் என்று பெயர். இதுவே காதல் மணமாகும். இது குறிஞ்சித்திணை; அதாவது குறிஞ்சி நில ஒழுக்கம். இக்களவு மணத்தின் அடிப்படையான முதற் சந்திப்பைப்பற்றி ஒரு அகநானூற்றுப் பாட்டு அழகாக உரைக்கின்றது.

‘‘பூக்கள் நிறைந்த மலைச் சாரலிலே என் தோழிமார்களுடன் வேங்கை மலர் கொய்வதற்காகப் போனோம். புலி புலி என்று ஆரவாரித்துக்கொண்டே வேங்கை மலரைப் பற்றிக் கொண்டிருந்தோம்.

‘‘இந்த ஓசையைக் கேட்டவுடன், கண்களைப் போன்ற ஒளி பொருந்திய செங்கழுநீர் மலர்களை ஊசியின் துணைகொண்டு கோத்துச் செய்யப்பட்ட மாலையைத் தோளிலே அணிந்தவன்; தலையின் பக்கத்திலே செம்மலர் மாலையை அணிந்தவன்;