பக்கம் எண் :

சாமி. சிதம்பரனார்85

மார்பிலே செஞ்சந்தனம் பூசியவன்; வரிந்து கட்டிய வில்லிலே ஒரு அம்பைத் தொடுத்தவன்; ‘‘நீங்கள் சொல்லிய புலி யாது? அப்புலி எத்திசையிலே சென்றது?’’ என்று கேட்டுக்கொண்டே எங்கள் எதிரில் வந்து நின்றான்.

‘‘அவனைக் கண்டு நாங்கள் நாணமடைந்தோம். நாங்கள் ஒருவர் பின் ஒருவராக எங்கள் முகத்தை மறைத்துக் கொண்டு நின்றோம்.

‘‘அவன் எங்கள் நிலையைக்கண்டு மிகவும் அன்புடன் ‘‘ஐவகையாகக் கூந்தலை அழகு செய்து முடித்துக் கொள்ளும், கருமையும் குளிர்ச்சியும் பொருந்திய தலை மயிரை உடையவர்களே! அழகிய நெற்றியை உடையவர்களே! அழகுள்ளவர்களே! உங்கள் வாயினால் பொய் சொல்வதும் உண்டோ?’’ என்று கேட்டான்.

‘‘பின்னர் மெதுவாக-குதிரையை மெதுவாகச் செலுத்தும் தேரையுடையவன்-எங்களை நேரே பார்த்தான். உன் மகளுடைய மையுண்ட கண்களைப் பல முறை நோக்கினான்; அவளும் நோக்கினாள். பிறகு அந்த மலை நாட்டின் தலைவன் போய்விட்டான். ’’

மலிபூஞ்சாரல் என்தோழி மாரோடு
ஒலிசினை வேங்கை கொய்குவம் சென்றுழிப்
புலிபுலி யென்னும் பூசல் தோன்ற;
ஒண்செங் கழுநீர்க் கண்போல் ஆயிதழ்
ஊசிபோகிய சூழ்செய் மாலையன்,
பக்கம் சேர்த்திய செச்சைக் கண்ணியன்,
குயம்மண்டு ஆகம் செஞ்சாந்து நிவி,
வரிபுனை வில்லன், ஒருகணை தெரிந்துகொண்டு
யாதோ மாற்றம; மாதிறம் படர்என,
வினவி நிற்றந்தோனே; அவற் கண்டு