பக்கம் எண் :

சாமி. சிதம்பரனார்87

‘‘நீ ஒருநாள் வராமல் நின்றுவிட்டாலும் என் தோழி உயிர் வாழமாட்டாள். அவளுடைய தோளைத் தழுவிக் கொண்டு பிரியாமல் வாழ்வதிலே நீயும் ஆவலுடையவன்.

‘‘எவ்வளவுதான் அளவு கடந்த காதலர்களாயினும் சரி, அறிவுடையோர், பிறர் பழிக்கும்படி அடைகின்ற இன்பத்தை விரும்பமாட்டார்கள.

‘‘ஆதலால் வானளாவிய மலையையுடையவனே! நீ மணம் செய்வதற்குத் தடை யென்ன?

நாள் இடைப்படின் என்தோழி வாழாள்;
தோளிடை முயக்கம் நீயும் வெய்யை;
கழியக் காதலராயினும், சான்றோர்
பழியொடு வரூஉம் இன்பம் வெஃகார்;
வரையின் எவனோ வான்தோய் வெற்ப’’.                           (பா. 112)

இல்லற வாழ்க்கை

கற்புமணம் புரிந்து வாழும் காதலர்கள் வாழ்விலே என்றும் இன்பத்தென்றல் வீசும். அவர்கள் கருத்தொருமித்து வாழ்ந்து இல்லறத்திற்குரிய கடமைகள் அனைத்தையும் தவறாது நடத்துவர். இதுவே பண்டைத்தமிழர்களின் இயல்பு. இதனைப் பல பாடல்களிலே காணலாம்.

ஒருவன் தன் காதலியுடன் ஒன்றுபட்டு இன்புற்று வாழ்கின்றான். அப்பொழுது அவன் பொருள் தேடப் புறப்பட ஆயத்தமானான். அச்சமயத்தில் அவன் காதலியின் தோற்றத்தைக் கண்டான்: தான் பொருள் தேடச் செல்லும் எண்ணத்தைக் கைவிட்டான். இச்செய்தியைக் கூறுகிறது ஒருபாட்டு.

‘‘கற்கள் நிறைந்த வலிய நிலமாகிய பயனற்ற பாலைவனத்தைக் கடந்து பொருள் தேடச் செல்ல நினைப்பீராயின் அது அறமாகாது: முன்னோர் மொழிந்த பழமையான