126. நாட்டார் நாட்டம் - நகரத்தார் சதி. யோ. 11 : 55 - 57. 5. எண்டிசை யிருந்தும் யூதராஞ் சனங்கள் குழுமியே யெழும்பிவந் தனரே பண்டிகை யிதுபட் காவையா சரிக்க படர்ந்தனர் பதியெரு சலைக்கே மண்டல மிதன்பட் காவெனும் பலியாய் மரிக்கவே யுதித்ததற் பரனோ பண்டிகை யதிலே தம்மைச் செலுத்தவே பரிவொடு விறைந்துசென் றனரே. 6. சூட்டிக மொடுமே யூதரே திரள்பேர் சுத்திக ரிக்கவே தமையே நாட்டினி லிருந்தே யம்பதி யடைந்தார் பண்டிகை நாள்வரு முனமே நாட்டமா யிவரே பட்டண மெவணும் நாதனைத் தேடியுங் காணார் வாட்டமே யடைந்தே யாலய மடைந்தார் மாகவ லொடும்பே சினரே. 7. என்னகா ரணமோ காண்கிலே மவரை இறைவனின் சித்தமு மெனவோ என்னினைக் கிறீரோ இவ்விழா வினுக்கே வருவரோ வருவதே யிலையோ மன்னனத் திசையில் செய்ததாம் வலிய மகிமை கிரியை யனைத்துமே நன்றுகண் டவரே நம்பியே யிருந்தார் நாதன டைவர் ராச்சியமே. 8. பெரியவர்ச் சகரோ பரிசய ரனைவோர் சனத்துளே மற்றுள பெரியோர் பரன்திருக் குருவைப் பகைத்துமே யவரைப் பிடிக்கயோ சனைகொண் டிருந்தார் அறங்கிள ரருளார் குருபர னமரும் அடத்தை யெவனுமே யறிந்தால் கரவா ததையே தமக்குரைக் கவுமே தரவிட் டிருந்தார், 127. செபதேயு மக்களின் பேராவல் மத். 20 : 20 - 28; மாற். 10 : 35 - 45. 9. ஆவலாய்ப் பரனே நடக்கஅம் பதிக்கே யண்டினர் செபதெயு குமரர் தாவிவந் தனரே தமதுதா யொடுமே யாக்கபு மருளனு மிருவர் மவியே யவரின் திருவடி பணிந்தோர் வேண்டுதல் செயவிரும் புகிறோமே தாவியெ மதுமேல் தயைபுரிந் ததனை தன்னா தருளு மென்றனரே. 10. வேண்டுத லெனவோ உமக்கியான் செயவே விரும்புமேஅக் காரியம் விளம்பும் வேண்டுவ திதேநீ ருமதுராச் சியத்தில் மகிழ்ந்து வீற்றருள் பொழுதில் ஆண்டவா தயவா யெமக்கரு ளுவீரே வலதிடப் பாகமே யமர ஆண்டவா யெமது மேலுய அருளை யவ்விதம் விளக்குர் எனவே |