11. அறிந்திலீ ரிருவர் அவாவோ டுமேநீர் யாதெனக் கேட்குமிவ் விடயம் அரியதா மடையப் பாக்கியமொன் றினையே யாவலாய்க் கேட்கிறீ ருமக்கே பருகவா குமோதாம் உங்களா லிதையே யான்பரு குபாத்திரத் தினிலே பெறவுமா குமோதான் உங்களா லிதையே யான்பெறுட்ம பானமென் றனரே 12. பருகவும் பெறவுங் கூடிய தெமக்கே பாத்திரம் பானமா மவற்றில் பருகுவீ ரெனது பாத்திரத் தினிலே பண்பொடேன் பானமும் பெறுவீர் இருக்கவ லதிடப் பாரிசங் களிலே யதுவா யத்தமோ எவர்க்கோ அருட்பிதா கரத்தி லுள்ளதிவ் விடயம் ஈய்கிற தென்பொறுப் பலவே. 13. அருட்கு தமக்கும் அவ்விரு வருக்கும் நடந்தவிவ் விடயமே யறிந்தோ இருவறு வருக்குள் இவ்விரு வருமே யேற்றமாம் அடமே விரும்ப இருசிசி யரின்மேற் கொண்டன ரெரிச்சல் எனைய சீடராம் பதின்மர் குரபர னழைத்தே தம்மிட மவரை கூறின ரன்னருக் கிதுவே. 14. புறசா தியர்க்குள் ளதிபரா னவரோ தீங்குமே புரிகிறா ரவர்க்குள் அறநெறி யகன்றே அந்தசா தியர்மே லாள்கிறா ரிறுமாப் பொடுமே பெரியவ ரவர்க்குள் மாபெரு மையொடே யாள்கிறார் கடினமா யெனவே அறிந்திருக் கிறீரே யாயினு முமக்குள் ளப்படி யிருப்பதோ நலமில. 15. எவனுமே யுமக்குள் ளோர்பெரி யவனா யிருடக்கவே விரும்பினா னெனிலோ அவனுமே யுமக்குள் தாழ்மை யணிந்தே யவனொரு வூழ்யனா குவனே எவனுமே யுமக்குள் மேன்மை யடைந்து யிருக்கவே விரும்பினா னெனிலோ அவன்தாழ்ந் துமக்குள் உம்மனை வருக்கும் பணியா ளாகுக நலமாய். 16. ஊழியங் கொளவே யாவலா யுலகே மனுமக னிறங்கிவந் தனரோ ஊழியங் கொளவோ அல்லவே யலவே உலகினுக் கூழியஞ் செயவே பாழிலே யழியும் பாவமா னுடராம் அனேகரை மீட்கிறி பொருளாய் நாளிதிற் றமது சீவனை யருள நலமொடும் வந்தனர் நிசமே. 128. குருடனுக்குப்பார்வையளித்தல்.லூக். 18 : 35 - 43. 17. திருக்குரு நடந்தார் திருப்பதி முகமாய் தொடர்ந்தனர் சீடருஞ் சனமும் அருட்குரு பரனுக் கவர்செவி கொடுத்தே யவர்பினாற் சென்றனர் சனமே நெருங்கினர் பரனே நெடுவழி நடந்தே நீண்டநாட் பட்டண மெரிகோ குருடனா மொருவன் வழியரு கிருந்தான் யாசகங் கொண்டவ ணிருந்தான் |