18. வசமொடு சனமே வருந்தொனி யறிந்தே யென்னவென் றவன்வின வினனே நசரயன் இயேசு குருபரன் நடந்தே செல்கிறா ரெனநவின் றனனே இசரவே லரசே தவீதுட குமரா யேசுவே யிரங்குமென் றிறைந்தான் அசடுமே செயாதே அபயமு மிடாய்நீ யென்றதட் டினர்முன் செலுவோர் 19. இரங்குவீ ரெனக்கே தவீதுமைந் தனேநீர் என்றிறைந் தனனவ னதிகம் பரன்குரு தரித்தே பகர்ந்தனர் பரிவாய்த் தம்மிட மவனையே கொணர கரத்தைப் பிடித்தே கடிதினிற் கொணர்ந்தார் காருணி யனிடமந் தகனை இரங்கினே னிதுபோ துனக்கென செயயான் வேண்டிய தென்றிசைத் தனரே. 20. பார்வையே யிழந்தேன் பரிதபித் தெனின்மேல் பார்வையே யளியுமென் றனனே பார்வையே யடைந்தாய் உனின்விசு வசமே பண்பொடுமே ரட்சைசெய் ததுனை பார்வையே யடைந்தான் பரமனைத் துதித்தான் ஆர்வமாய்ப் பரனையே தொடந்தான் பார்த்தனைவரு மே அங் கதிசய மடைந்தார் பார்த்திபன் கடவுளைப் புகழ்ந்தே. 129. சகேயு தரிசனம் பெறல். லூக். 19 : 1 - 10. 21. திருக்குரு நடந்தே பின்செலத் திரள்பேர் எரிகோ நகருளே செலவே தெருவழி யினிலே சீடருஞ் சனமுங் கூடியே பவனிசென் றனரே அருட்பரன் குருவைப் பார்க்கவே விரும்பி யந்நகர் சனங்குழு மினரே பரன்ருட் குருவைப் பார்க்கவே விரும்பி யோர்வழி தெரிந்தன னொருவன் 22. பரிசயர் குழுவார் இழிந்தராய் மதித்த ஆயமே கொளும்பா வியருள் பெரியதோர் மனுடன் தனத்திலும் பெரியோன் ஆயமே கொளுபவர் தலைவன் சிறியதோ ருருவான் சகேயுவென் குறியன் காணுதல் அச்சனத் திரளுள் அரிதென அறிந்தே திரள் சனம் விலசி யாவலா யோடினன் திரள்முன். 23. நாட்டமா யவனே பார்க்கநா தனையே நலமோடு மவ்வழி யருகுள் காட்டத் தியின்மே லேறியே கடிதில் இருந்தனன் காணவே யவரை கூட்டமுள் நடந்த தற்பர னவணே குளிர்மரத் தண்டை வந்ததுமே நாட்டமாய்த் தமையே நோக்கியே யிருக்கும் மனுடனை நோக்கினா ருயர |