24. காத்திருந் தவனுங் கண்டுமே களித்தான் கலியெலா மகற்றவந் தவரை பார்த்திப னவன்மே லன்புகூர்ந் தனரே பரிவொடுஞ் சகேயுவை நோக்கியே ஆத்திர மொடுமே யத்தரு விருந்தே யிறங்கிவ ருவாயென திடமே நேர்த்தியா யிதுநாள் நின்னகத் தினிலே தங்குவே னெனவுரைத் தனரே. 25. குள்ளனா மவனே குந்தியே யிருந்த கிளையினின் றிறங்கியே குதித்தான் உள்ளமே மகிழ அன்புமே பெருக உயர்குரு பரனையே வணங்கி தளளியே வெறுக்காத் தற்பரன் குருவைத் தனதக மழைத்தே கினனே உள்ளவா வொடுமே சற்குரு பரனுக் கொருபெரும் விருந்துசெய் தனனே. 26. பார்த்தவர் பலவேர் ஆண்டவர் பகர்ந்த நடந்வா மிவைகளைப் பழித்தே சாத்திர மொடுமே சாற்றினர் பவியின் அகத்தினி லிறங்கினார் எனவே பாத்திரன் சகேயு பார்த்திப னிடமே பகர்ந்தனன் தமியனென் னுடைய ஆத்தியி லளிப்பேன் பாதியாண் டவரே யன்பொடே யெளியவர் களுக்கே. 27. எவனிட மிருந்தும் வாங்கியே யிருந்தால் அநீதிமா யவன்பொரு ளெதையும் அவனுக் கதையே யீரிரு மடங்காய்ச் செலுத்துவேன் திரும்பியென் றறைந்தான் எவனையும் பரக்க இவ்வுல குதித்த இறைவனின எழில்திரு அருளால் அவன்மனந் திரும்பி யேசுவி னடியை யடையலா யினனிது விதமே. 28. அன்பொடு பரனே யவன்முகந் திரும்பி யறைந்தன ரன்புள வசனம் இன்பொடிவ் வகத்துக் கித்தினத் தினிலே யமர்ந்ததே ரட்சையென் றனரே இன்பொடு மபிராந் தனயனா யினனே யிழந்ததைத் தேடரட் சைசெய அன்பொடித் தலமா மவனியி லுதித்தார் அருள்மனு மைந்த னென்றனரே. 130. பத்துராத்தலுவமை.லூக். 19 : 11 - 28. 29. எருசலம் நகராந் திருப்பதிக் கதிகச் சமீபமாய் வந்திருப் பதனால் திருப்பரன் கடவுள் சிறந்தராச் சியமாம் எழில்மிகு பரமராச் சியமே திருப்பதி வரவே வெளிப்படு மெனவே திடமொடு சனம்நினைத் ததனால் அருட்பர னிவற்றை யுரைத்ததின் பிறகே யறைந்தனர் பிறிதொரு வுவமை. |