30. பிரபுவா மொருவ னாயினன் பயணம் தூரமாம் பிறதலஞ் செலவே பிரபல முளதாம் ராசகம் பனனாய் ராச்சிய மடைந்துமே திரும்ப புறப்படும் பொழுதில் பதின்மரூ ழியர்க்கே பத்துராத் தலேபொருள் கொடுத்தே திரவிய மிதனால் வர்த்தகம் நடத்தும் யான்வரு மளவுமென் றனனே. 31. அவனதூர் சனமோ அவனைப் பகைத்தே யனுப்பினர் பிரதிநி திகள்பின் இவனை யெமின்மே லரசனாக் குவதே மனமிலை யெமக்கெனச் சொலவே அவன்தன தரசே யடைந்துவந் தனனே யழைந்தனன் திரவிய மடைந்தோர் அவரவர் வணிகஞ் செய்துதே டியதே யெவளவெ னவவரை வினவ. 32. ஒருமக னுரைத்தான் உமதுராத் தலினால் ஊதியம் பத்துராத் தல்கள் தருமனா மெசமான் அடைந்தனன் மகிழ்வே சாற்றினன் உத்தம ஊழியா சிறுபொரு ளெனினுஞ் சிறியதா மிதிலே சிறந்தயுண் மையே யுளனாய் இருப்பாய் சிறப்பாய் அதிபனாய் நிசமே நகர்களீ றைந்துமேற் றாமே. 33. இரண்டா மூழியன் வந்திவ னிடமே ஆண்டவா எனதுவ ணிகத்தில் ஒருராத் தலினா லாயின தெனக்கே ஊதிய மைந்துராத் தலுமே இருந்தனை யிதுவே காதியத் தினிலே யுண்மை யுளவனாய் நிசமே இருப்பாய் சிறப்பா யாதிப னிவையே யைந்தே நகர்க்கென் றனனே. 34. வந்தன னொருவன் வகையொடு கொணர்ந்தான் வாங்கிய ஒருராத் தலையே இந்தோ எசமான் உமதுட பொருளே வாங்குவீ ரிதனையே திரும்ப அந்தோ அறிவேன அநீதமே புரிவீர் நீர்விதை யாவிட மறுப்பீர் எந்தவி தமுமே தெரிந்துமே யெடுப்பீர் வையாப் பொருளதை எவணும். 35. மனதினிற் கடின முள்ளவோர் மனுடன் எனஅறி வேனுமை யதனால் மனப்பய மடைந்தேன் மறைத்துவைத் திருந்தேன் இதையொரு துணியில் முடிந்தே இனமொடு மிதனை யெடுத்தருள் புரிவீர் எளக்குப காரதென் றனனே கனவா னவன்மேற் கடுஞ்சின மடைந்தான் கடினமாந் தீர்ப்புமிட் டனனே. 36. உன்னுரைப் படியே யிடுந்தீர்ப் புனக்கே மாகெடு ஊழியஇப் பொழுதில் என்னதல் லததாம் பெரும்பொரு ளெடுப்பேன் யான்வையா இடத்தினி லிருந்தும் என்னில மலதாம் பிறநிலத் தினிலே விதையா தறுப்பவ னெனவும் என்னை யறிந்தாய் இரக்கமற் றவனாங் கடினமா மனுடனே யெனவும் |