பக்கம் எண் :

254

 

37.        ஏன்விட விலைநீ என்னுட பொருளைக் காசிடுங் கடையிலிட் டிருந்தால்
              நான்வரும் பொழுதில் வட்டியோ டதனைப் பற்றுவேன் திரும்பவும் நிசமாய்
              நானிவற் கெதுவும் நன்மை செயவே பாத்திர னிலனே நிசமாய்
              ஏனிவற் கிதுலே ராத்தலை யெடுத்தே பத்துராத் தலுளனுக் களிப்பீர்.

38.        அவனிட முளதே பத்துராத் தலேதான் எனவறைந் தனரூழ் யருமே
              எவனுமே யுளனோ கொடுபடு மவனுக் கினுமதி கமாம்நன் மைகளும்
              எவனுமே யிலனோ இழந்துமே குறைவான் இருப்பதும் எடுபடும் நிசமே.
              எவனுமே தனக்கே யுளநல மெதுவோ விருத்திசெய் வதேயவன் கடமை.

39.        என்னைப் பகைத்தே ராசனா யெனையே யேற்கவே மனமற் றவராம்
              என்பகை ஞரையே கொணருமிவ் விடமே யென்முனால் வெட்டுமென் றனரே
              இன்னவை யுரைத்தே யிறைவனாங் குருவே யந்நகர் தங்கியவ் விரவில்
              மன்னவன் மறுநாள் எருசலேம் நகர்க்கே யங்கிருந் தெழுந்தனர் பயணம்.

131. பர்த்திமேயு பார்வையடைதல். மத். 20 : 29 - 34; மாற். 10 : 46 - 52.

வேறு

40.        எரிகோ நகரைவிட் டருட்குருவே எருசலேம் பதியினுக் கெழுந்தனரே
              திரண்டவோர் கூட்டமாய் சனங்களுமே திரண்டுபன் சென்றனர் சிசியரொடே
              இரக்கமோ குருவெனு மெழில்குருவே யிதுவழி வருவரென் றறிந்தவராய்
              எரிகோ நகரின் வெளிப்புறமே யெளியரா மிருவரே யிருந்தனரே.

41.        இருவரி லொருவனோ முன்தினமே யிறைவனாற் குருடுநீங் கினமனுடன்
             குருடனா யிருந்ததை நீயறிவாள் குருடுமே யகன்றுகண் ணடைந்தவன்யான்
              உருக்கமார் திருக்குரு யேசுபரன் உனக்குமே சுகவிழி யருள்வரென
              குருடனா மறிமுக னொருவனையே கொணர்ந்துமே வழியரு கிருந்தனரே.

42.        யேசுவே யவ்வழி வருந்தொனியே யிருவரின் செவிகளிற் புகஅவரே
              யேசுவே தவீதுட திருமகனே யிரங்குவீ ரெமக்கென் றிறைந்தனரே
              பேசியே யதட்டினர் சனங்களுமே யினும்பெரும் குரலா யிறைந்தனரே
              யேசுவோ தரித்தன ரதுசணமே யிரக்கமா யழைத்துமே யவர்களையே.