84. விளித்தனர் ஒருதர மிருதரமோ விளித்தனர் மூன்றாந் தரம்பரனே விளித்தனர் சிமியோன் பெயராலே விடுத்தனர் பேதுரு என்பெயரை களிப்பொடு மடைந்த அப்பெயரோ கறைந்தும றைந்தே போனதையோ விழித்துமே யவனே யுணர்ந்தறிய விளித்தனர் மாறியே சீமனென. 85. யோனா மகனே சீமோனே யுணர்ந்துன துடநிலை சிந்தனைசெய் போனாய் விழுந்தே தவறியேநீ பொறுத்துநிற் கவேவேண் டியபொழுதில் ஆனா லதைவிடுத் திதுபொழுதில் அறைவா யெனைநே சிக்கிறாயோ மூணாந் தரமவர் வினவவுமே முகமன மிவைகளில் வாடினனே. 86. எல்லா மறிந்தோய் எனதாண்டாய் என்தனை யும்மறி வீராண்டாய் நல்லோ ரெவருட இருதயமும் நன்றிலா தவரின் இருதயமும் எல்லா மறிபவர் திருமகன்நீர் எனின்மேற் கருணையுங் கொண்டவர்நீர் எல்லா மறியவ லவர்நலமாய் நானுமி லன்புளே னென்றறிவீர். 87. ஆத்திர மாயிது சொல்லவுமே ஆண்டவ ரருளொடு பார்த்தவனை பாத்திர மாக்கினெ னுனையேயான் பார்ப்பா யெனதரு ளூழியமே நேத்திரம் போலென தாடுகளை மேய்ப்பா யெனவரு ளோடுரைத்தார் காத்திருந் தோன்முக மேஜொலிக்க மாகளிப் பொடுதிருத் தாள்பணிந்தான். 88. கிறிஸ்தவ னெனும்பெயர் பூண்டவனே கிறிஸ்துமே லுனினன் பெப்படியோ குருசினில் மரித்தவுன் னேசரிலுங் கொடுங்கெடு அலகைமே லதிகவன்போ பரியமோ வுலகுமே லுன்தனிடம் பெரியஅன் புளருன் மீட்பரிலும் பெரியவுட் பகைவனா மாமிசமேல் பிரியநே சமுமே யுண்டுனக்கோ. 89. வாலிப வயதினி லுனதுடைய அறையைநீ வரிந்துகட் டினைநிசமே சோலியா யுனதுட மனமேபோற் றுடியாய் நடந்தா யெவணெவணும் வாலிபங் கடந்துனின் முதிர்வயதில் வலியவுன் கரங்கள் நீட்டுவையே வாலிப னொருவனாம் வேறொருவன் வரிந்துமே கட்டுவா னுன்னறையை. 90. அரையை கட்டியே பின்னவனே யழைத்துனை நடத்தியே தன்மனம்போல் விரைந்தே யிட்டவன் செல்லுவான்நீ விரும்பா வழியாம் மார்க்கமாயே உறைக்கிறே னுனக்கிதை யுண்மையாய் யுறைக்கிறே னிதையுனக் கென்றனரே உரைத்தா ரிதையோர் குறிப்பாயே யுணர்த்தவே யவன்முடி வீதெனவே. |