98. விசுவச முளனாய்த் தீக்ஷைபெற் றோன்மேன் மையாம்ரட்சிப் படைகுவனே விசுவச மில்லா னாரெனினும் மெய்யா யாக்கினை யேயடைவான் விசுவச முளராம் பக்தராலே மெய்யடை யாளமே பலநடக்கும் விசுவச சத்தாற் பேய்களையே வெருட்டியே சுகமருள் வார்நலமாய். 99. நாவினா லிதுவரை பேசியிரா பல்நவ பாஷைகள் பேசுவரே சாவுமே புரியுஞ் சர்ப்பமெதுஞ் சற்றுமே யச்சமின் றேயெடுப்பார் சாவினுக் குரித்தாம் பானமெதுஞ் சாப்பிடச் சேதமே செய்வதில்லை மாவல பிணியுள ராரையுமே நாடியே தொடவே சொஸ்தமாவார். 100. நடக்குமே நிசநிச மிவையனைத்தும் நலமுறு திருச்சுவி சேடமேதான் திடவிசு வாசமே யணிந்தவராய் திடமொடு கூறுவீர் தீவிரமாய் தடம்விரி ஜெகமிதின் முடிவுரைசக லநாட்களு மேயும தொடும்யானே திடமுற விருக்கிறேன் உமையகலேன் திடமொடும் நடத்துமும் மூழியமே. 101. பரிந்தியா னுமக்கே யனுப்புகிறேன் பரன்பிதா வர்க்கே யருளியதை பரிசுத் தம்முறை உளதமெனும் பரத்தினின் றேவரும் பலமதனால் தரிப்பிக் கப்படுந் தினம்வரைக்கும் தரித்திரும் சாலேம் பதியிலென்றே பிரிந்துமே மறைந்தார் சிஷியர்களே பெரிதுமே மகிழ்வே கொண்டனரே. 102. இவ்விதந் திருப்பரன் கிறிஸ்துவுமே யெழுந்தபின் நாற்பது நாளளவும் செவ்விதாய்ச் சிஷியரே மனத்திடனுந் திடவிசு வாசமுங் கொண்டவராய் தெய்வமா சுதனுயிர்த் தெழுதலுக்கே சிறந்தமெய்ச் சாட்சிக ளாவதற்காய் பல்விதம் பலபல தலங்களிலே பலதரங் காட்சிகள் தந்தனரே. III.2. மாரணம் வென்ற பர்வம் முற்றிற்று. III.ஜெய காண்டம் முற்றிற்று. |