IV. ஆரோகண காண்டம். உன்னதத்தி லோர்மகிமை யுற்றவராம் ஓர்சுதனே தம்மகிமை யாவுமேவிட் பின்நிலத்தோ ரேழையாயே மானுடனா யீனமிகு சாபமுற்ற மாந்தரையே நன்னயமாய் மாட்சியொடு மீட்பதற்கே வன்குருசில் வாதையொடு மாண்டுயிர்த்தே உன்னதரின் சித்தநிறை வேற்றியராய் உன்னதமெ ழுந்தவர்பா தம்பணிவோம். 183. நாற்பதாம்நாட் சம்பவம். மாற். 16 : 19; லூக். 24 : 50 & 51; அப். 1 :3 - 9; சங். 24 : 7 - 10; சங். 47 : 5; சங். 150 : 3 - 5. 1. மரித்துயிர்த் தெழுந்தபின் மகிமையாய்ப் பரனே பிரித்திருந் தவராம பிரியசீ டருக்கே அருளொடு தரிசன மளித்துநாற் பதுநாள் தரித்திருந் தனரித் தரணியாந் தலமே. 2. கண்டவர் தரிசனங் கலிலெயா மலையில் விண்டுமே சொலவொணா வியப்பொடு களிப்பாய் அண்டின ரெருசலே மவசர மொடுமே பண்டைய நகரினிற் றரித்திருந் தனரே. 3. நாற்பதாந் தினமே நலமொடு வரவே மேற்புற அறையினில் மெய்விசு வசியர் நாற்புரம் பரவியே நலமொடு மிருக்க தாற்பர னவர்க்கே தரிசன மளித்தே. 4. தீக்ஷைய தனனே தீக்ஷகன் ஜலத்தால் தீக்ஷைய தோமனந் திரும்புதற் கெனவே தீக்ஷைய பெறுவீர் திருப்பல மடைய தீக்ஷைய பெறுவீர் திருரூ பியரால் 5. உரித்தொடு பெறுவீ ரெனவுமக் குரைத்த திருப்பிதா வுரையே நிறைவுறத் திடமாய் பிரிந்தெவ ணகலேல் பெறும்வரை யதனை தரித்திரு மெருசலேந் தலத்திலென் றனரே. |