பக்கம் எண் :

திரு அவதாரம்375

 

6.           இன்றையத் தினமோ இயேசுவே பிரிந்தே
              ஒன்றியா யகலா தொருமித் தெழுந்தார்
              சென்றனர் தொடர்ந்தார் பதினொரு சிஷியர்
              சென்றனர் பெத்தனி சிறுபதி முகமாய் 

7.           ஆண்டுமே செலும்பொழு தணுகியே சிஷியர்
              வேண்டியே வினவினர் விரும்பியே மகிமை
              ஆண்டவா ராஜ்ஜிய மருள்வதிப் பொழுதோ
              மீண்டுமின் ஜனமா மிஸரவே லருக்கே.       

8.           அடுத்ததில் லுமக்கே யறியவே ளைகளே
              அடுத்தா தீனம் அருட்பிதா அவர்க்கே
              அடுத்துறு விஷயம் அதிகமுக் கியமாம்
              விடுத்திதை யதையே விழித்துநோக் குவீரே.       

9.           பரிசுத் தாவியர் பரிந்துமேல் வருவார்
              தரிப்பிப் பாருமைத் தகுவுயர் பலனால்
              இருமென் சாட்சிகள் எருசலேம் யூதா
              அருகுச மார்யா அகிலமே முழுதும்

10.        இஃதனைச் சொலியே சிஷியரோ டியேசே
              பெத்தனிப் பதியின் பின்னிருந் தெழுந்த
              உத்தம ஒலவின் உச்சியே யடைந்தார்
              சத்தமில் லாதே சற்றமர்ந் தனரே.       

11.        அத்தனோ தமதரு ளிருகர முயர்த்தி
             பக்தசீ டருக்கும் பதினொரு வருக்கும்
             உத்தம ஆசி யுவந்தனித் தனரே
             அத்தரு வாயினி லவரைவிட் டெழுந்தார்.       

12.        அன்றுயர்ந் தவையாம் அவர்திருக் கரங்கள்
              இன்றுமே யவருட எளியரா னவர்மேல்
              வென்றியா யிகபர வெகுநல மளிக்க
              என்றுமே விரிந்தவா மெழிலருட் கரங்கள்.