த
திருக்கருவைப்
பதிற்றுப்பத்தந்தாதி |
117 |
100.
வெள்ளை
மேனியாய் ! போற்றி. ஒப்பனை
மேவு
மார்பனே ! போற்றி, போற்றி.பூங்
கள்ள லம்புதண் களவின்
நீழலிற்
கருணை யங்கடற்
கடவுள் ! போற்றி.நான்
உள்ளம் ஒன்றிநின்(று)
அடிவ ழுத்திட
உதவி செய்தவா !
போற்றி. இன்புறத்
தெள்ளு செந்தமிழ்க்
கருவை மாநகர்ச்
செல்வ !
போற்றி.நின் சீர்கள் போற்றியே.
(பால்போலும்)
வெள்ளிய திருமேனியனே ! வணக்கம். ஒப்பனை யம்மை விரும்பிச் சேர்ந்த திருமார்பனே !
வணக்கம், வணக்கம். தேன் ததும்புகின்ற மலர்களை யுடைய குளிர்ந்த களா மரத்தின் நீழலில்
எழுந்தருளிய அருட்கடலான ஐயனே! வணக்கம். நான் மனம் பொருந்தி நிலைத்து (உனது) திருவடிகளைத்
துதிக்க (உணர்வு கொடுத்து)அருள் செய்தவனே ! வணக்கம். இன்பமுண்டாகும்படி தெளிந்த செவ்விய
தமிழ் வழங்கும் திருக்கருவை என்னும் சிறந்த நகரிற் கோயில் கொண்டருளிய (சர்வ) ஐஸ்வரியனே
! (வணக்கம்.) அளவிடற்காகாத உன்னுடைய நலங்கள் (யாண்டும் என்றும்) புகழப்படுவனவாக.
மேவுதல்-விரும்புதல். அலம்புதல்-ததும்புதல். ஒன்றி-பொருந்தி. நின்று-நிலைத்து.
வழுத்தல்-துதித்தல். உதவி-அருள். ‘ நாவலர் தெள்ளு செந்தமிழ் ’ என்பதும் பாடம்.
‘உள்ளம் ஒன்றி
நின்று அடி வழுத்திட உதவி செய்தவா ’ என்றது, பொது வகையால் சிவபெருமானைத் துதிக்க
உணர்வளித்த திருவருளைக் குறித்தலோடு ; சிறப்புவகையால், சிவபெருமானைத் துதிக்க என்றெடுத்த
இந்நூல் இனிது முடியச் செய்த திருவருளையும் குறிக்கும். தெளிவும் செவ்வியும் இன்புறுதற்கு
ஏதுவாத லால் ‘ இன்புறத் தெள்ளு செந்தமிழ்’ என்றார். ‘தெள்ளு
|