பக்கம் எண் :

118

திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி

செந்தமிழ் ’ என்னும் சொற்றொடர்க்குப் பொருள் முன் 81-ம் செய்யுளிற்       கூறப்பட்டது.  ‘ நின் புகழைப் பாடத்தொடங்கி முடித்தேனாயினும் நின் புகழ் இதனோடு முடிந்ததில்லை.  பலவாகி அளவிறந்த நின் கீர்த்திப் பிரதாபங்கள் என்றென்றும் புகழப்படுவனவாக என்று கூறுதலன்றி யான் நின்புகழை முற்றமுடிய உரைக்குமா றறியேன் ’ என்பார் ‘நின்சீர்கள் போற்றியே’ என்று முடித்தார்.  அந்தாதியாதலால் சீர் என இறுதியும் முதலும் மண்டலித்து முடிந்தது.

திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி

மூலமும் உரையும்

முற்றும்.