த
திருக்கருவைப்
பதிற்றுப்பத்தந்தாதி |
13 |
கண்களில் நீர்
சுரத்தலும், மனம் கரைகடந்த மகிழ்ச்சியுறுதலும், நாக்குழறுதலும், மெய் சிலிர்த்தலும், தன்வசம்
அழிதலும் கள்ளுண்டார்க்கும் பக்தி மிகுந்தார்க்கும் ஒப்ப நிகழும் குறிகளாதல் உணர்க மற்றுக்
கள்ளால் வரும் இன்பம் சிற்றின்பம் ; மயக்கந் தருவது ; தெவிட்டுவது : பக்தியால் வரும் இன்பமோ
பேரின்பம் ; தெளிவைத் தருவது ; தெவிட்டாதது. ஆனதுபற்றிப் ‘பரமானந்தத் தெளிநறவம் உண்டு தெவிட்டா
அருள்புரிந்தான்’ என்றார்.
(8)
9.
உரகா பரணத் திருமார்பும்,
உமைஒப்
பனையாள் இடப்புறமும்,
சிரமா லிகையும்,
புரிசடையும்,
செய்ய
வாயும், கறைமிடறும்,
வரதா பயமும் மழுமானும்
வயங்கு கரமும்,
மலரடியும்,
கருவா புரியான்
வெளிப்படுத்திக்
காட்சி
கொடுத்து நின்றானே.
சர்ப்பாபரணத்தை
யணிந்த திருமார்பும், உமையம்மையாகிய ஒப்பனாம்பிகையின் இடப்பாகமும், பிரம கபாலங்களாற்
றொடுத்த மாலையும், புரியையொத்த சடையும், சிவந்தவாயும், நீலகண்டமும், (அன்பர்க்கு) வரமும்
அபயமும் அளிக்கும் சின்னமும் மழுவும் மானும் விளங்குந் திருக்கரங்களும், தாமரை மலர்போன்ற திருவடியும்
ஆகிய இவற்றோடு திருக்கருவையில் எழுந்தருளிய இறைவன், காட்சி கொடுத்து நின்றருளினன்.
உரகம்-பாம்பு.
ஒப்பனை-அலங்காரம் ; இஃது இயற்கை அலங்கார சொரூபியான உமையம்மைக்குப் பெயராயிற்று. சிரமாலிகை-தலைமாலை.
மாலிகா என்னும் வடசொல் மாலிகையெனத் தற்பவமாயிற்று.
|