த
14 |
திருக்கருவைப்
பதிற்றுப்பத்தந்தாதி |
மேற்செய்யுளில்,
ஞானமே திருவுருவான சிவபெருமான் தமக்கு அருள்புரிந்ததைக் கூறினார். அவ்வருளே சத்தியாகப் பாகத்தே
அமரநின்ற உமாமகேஸ்வரத் திருக்கோலச் சிறப்பை ஈண்டுக் கூறினார். ஆன்மாக்களை அறியாமையினின்று
நீக்கி முத்தியின்பத்திற் சேர்ப்பது சத்தியோடுகூடிய சிவமேயாம். இதனை,
அருளது சத்தி
யாகும் அரன்றனக்(கு); அருளை யின்றித்
தெருள்சிவ
மில்லை ; அந்தச் சிவமின்றிச் சத்தி யில்லை ;
மருளினை அருளால்
வாட்டி மன்னுயிர்க் களிப்பன் முத்தி
இருளினை ஒளியால்
ஓட்டும் இரவியைப் போல ஈசன்.
என்னும் சிவஞானசித்தித்
திருவாக்கு இனிது விளக்குதல் காண்க.
வரதாஸ்தம்
கீழமைந்த திருக்கரம்; அஃது அடியார் வேண்டிய தருளுவது. அபயாஸ்தம் மேலெடுத்த திருக்கரம்; அது
சரணமடைந்தவரை அஞ்சலிரென்றருளுவது. மழுவேந்திய திருக்கரம் வலக்கரம்; மானேந்திய திருக்கரம்
இடக்கரம். உரக ஆபணரம் - உரகாபரணம்; வரத அபயம்-வரதாபயம்: வடமொழியில் வந்த தீர்க்கசந்தி.
(9)
10.
நின்ற நிலையும்,
செய்தொழிலும்,
நினைத்த
குறியும், வழிபாடும்,
ஒன்று பதமும், பதங்கடந்த
உண்மைப்
பொருளும் அறியேனை
இன்றும் அடியா
ருடன்கூட
எண்ணம் புரிந்த
இனிய அருள்
நன்று நன்று ! தமிழ்க்கருவை
நம்பா! உம்பர்
நாயகனே!
செந்தமிழ் வழங்கும்
திருக்கருவையி லெழுந்தருளிய இறைவனே! தேவர்களுக்குத் தலைவனே! யான் நிற்கின்ற நிலை இன்னதென்பதையும்,
(யான்) செய்கின்ற செயல்களையும், அவ்வச் செயல்களில் நின்று கருதும் மூர்த்தி
|