த
திருக்கருவைப்
பதிற்றுப்பத்தந்தாதி |
15 |
களையும், அம் மூர்த்திகளுக்குச்
செய்யும் வழிபாட்டையும், அவ் வழிபாட்டாற் கைகூடும் பதவிகளையும், அப்பதவிகளைக் கடந்துநின்ற
முத்தியையும் சிறிதுமறியாத என்னை இப்போது உன் அடியாரோடு கூடி வாழத் தேவரீர் திருவுளத்து எண்ணங்கொண்டருளிய
திருவருள் நன்றாயிருந்தது நன்றாயிருந்தது.
குறி-மூர்த்தம்.
ஒன்றுபதம்-பொருந்தும் பதம். எண்ணம் புரிந்த-எண்ணிய. நம்பன்-இறைவன். உம்பர்-உவ்வுலகம்-வானுலகம்; இது இடவாகுபெயராய் வானுலகத்துள்ள தேவரைக் குறித்தது. ‘உம்பரா ரறியா மறையோன்’
என்றார் திருச்சிற்றம்பலக் கோவையாரினும்.
நின்ற நினைத்த
என்பன, நிற்கின்ற நினைக்கும் எனப் பொருள்பட்டு, முறையே நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும்
காட்டின.
(10)
இரண்டாம்பத்து
இரண்டாஞ் சீரும் நான்காஞ்
சீரும் இறுதிச் சீரும்
மாச்சீர்களாகவும் மற்றைய
விளச்சீர்களாகவும் வந்த
எழுசீர் ஆசிரிய
விருத்தம்.
11.
நாயகன் முகுந்தன்
சததளப் பொகுட்டில்
நான்முகன்
என்னவீற் றிருக்குந்
தூயவன், கருவைக்
களாநிழல் அமர்ந்தோன்
துணையடிப்
புகழினை வழுத்தி,
மாயிரு ஞாலம் எடுத்
தேத்த
வரம்பெறு மதுரநா
வலர்கள்
சேயிரு விசும்பிற்
கற்பக நீழற்
செல்வமும் வேண்டுவ
திலையே.
|