பக்கம் எண் :

திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி

65

புன்கண் அகற்றி அடியாரை வீடு
        புகுவித்து நின்ற புனிதன்
    தன்கண் எனக்கு முடியாத அன்பு
        தாஎன்கொல் செய்த தவமே!

    எனது அகக்கண்ணினின்றும் நீங்காத ஞானச்செல்வனும், அழகு நிறைந்த களாவின் நிழலில் எழுந்தருளிய முதல்வனும், பாவிகளது நெஞ்சில் குடியேறுதல் சிறிது முணராத எப்பொருட்கும் தலைவனும், அடியேனது மனக்குற்றத்தை     ஒழிக்கும் பெருமானும், பிறவித் துன்பத்தை யொழித்து அடியவர்களை முத்தி    வீட்டில் குடியேற்றி நின்றருளிய மலரகிதனுமாகிய இறைவன், தன்னிடத்து, அடியேனுக்கு அளவில்லாத அன்பு தந்தருள அடியேன் செய்த தவம் யாது! (அறியேன்.)

    எழில் ஆர்-அழகுபொருந்திய. வன்கண்-கொடுமை.  புன்கண்-துன்பம்.  புனிதன்-பரிசுத்தன்.  தன்கண்-தன்னிடத்து (ஈண்டுக் கண் என்பது இடப்பொருளுணர்த்தும் ஏழாம் வேற்றுமையுருபு).  முடியாத-அளவில்லாத.

    வன்கண்ணர்-அன்பிற்குப் புறம்பாக நிற்கும் வன்னெஞ்சர்.  இறைவன் அன்புவடிவினனாதலால், அன்பிலார் உள்ளத்தில் விளங்கித் தோற்றானென்பது பற்றி ‘ வன்கண்ணர் நெஞ்சு புகுதாத நம்பன் ’ என்றார்.  திருவாதவூரடிகள் ‘புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க ’ என்று அருளிச் செய்ததும் காண்க.

(56)

57. தவமும் தவத்தின் உறுபேறு மான
        தலைவா!க ளாவின் முதலே!
    புவனங் களாவை; உயிர்வர்க்க மாவை;
        நுகர்போக மாவை; புகலும்
    திவசங் களாதி வருகால மாவை;
        தெளிவார்தெ ளிந்த அமையத்
    திவையன் றிநிற்பை: எனின்,ஐய ! நெஞ்சின்
        எவரே மதிப்பர் உனையே.