பக்கம் எண் :

66

திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி

    அடியவர் செய்யும் தவமும், அத் தவத்தால் வரும் பயனும் ஆகிய இறைவனே!   திருக்களாநிழலில் எழுந்தருளிய தலைவனே!   எல்லாப் புவனங் களுமா வாய் ; அவற்றிலுள்ள சீவராசிகளுமாவாய்; அவ்வான்மாக்கள் நுகரும் போகங்களும் ஆவாய்; சொல்லும், நாள்முதலாக வரும் காலதத்துவமாவாய்;    உன்னை உணர்வார் உணர்ந்த சமயத்தில் இவைகளல்லாமல் நிற்பாய்; என்றால், (இவ்வாறு நீ கலந்து நிற்றலால் உன்னை ) மனத்தில் கருதவல்லவர் யாவர்?  (ஒருவருமிலர்.)

    ஆவை-ஆவாய்; (ஐகாரவீற்று முன்னிலை வினைமுற்று).  திவசம்-நாள்.  அமையம்-சமயம்.  ஐய-ஐயனே; (ஈறுகெட்டு விளியாயது).

    உலகமும் உலகத்துயிர்களும் நீயே யாவை என்பது ‘ அகர முதல எழுத்தெல்லாம் ஆதி-பகவன் முதற்றே யுலகு’ என ஆசிரியர் திருவள்ளுவ நாயனார் அருளியமைகொண்டும் அறியப்படும்.  உலகம் முதலிய யாவும் தானேயாகும் இறைவன் ஞானிகள் அறிவு தெளிந்து நிற்கும் அனுபவநிலையில் உலகாதிகளின் வேறே தனித்துக் காணப்படுவன் என்று ஆகம நூல்கள் கூறினவாதலின் ‘தெளிவார் தெளிந்த அமையத் திவையன்றி நிற்பை’ என்றார்.

(57)

58. உன்நாமம்ஓதி உனையேவ ணங்கி
        உறுபூசை பேணும் உரவோர்
    பொன்னா டளிக்க வரம்நல்கும் ஆதி
        புனிதா!க ளாவில் உறைவோய் !
    முன்னே உனக்கியான் அடியானும் அல்லன் ;
        முழுஞானி அல்லன் எளியேன் ;
    என்னே ! பிழைத்த பிழைகோடி உள்ள
        எனிலும்பு ரத்தல் கடனே.

    உனது திருநாமங்களை எடுத்துக் கூறி, உன்னையே பணிந்து மிக்க பூசை செய்யும் ஞானிகள் பொன்னுல