பக்கம் எண் :

திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி

67

கத்தைக் காக்க வரந்தந்தருளும் முதலாயுள்ள புனிதனே! களாநிழலில் எழுந்தருளிய இறைவனே! அறிவிற் சிறியேனாகிய யான், முன்னமே தேவரீருக்குத் தொண்டு பட்டொழுகுவேனும் அல்லேன்; சிவஞானியும் அல்லேன்; ஐயோ,  உனக்கு எளியேன் செய்தபிழை கோடி யுள்ளன வானாலும் என்னைப் பாது    காத்தல் உன் கடனாம்.

    உரவோர்-ஞானிகள், (உரம்-அறிவு). புர-காப்பாற்று.

    ஈசன் திருவடி யெய்தற்கு அன்பும் அறிவும் இன்றியமையாது வேண்டப்படும்.  இதனை ‘ அன்பே சிவமா யமர்ந்திருந்தாரே ’ எனவும் ‘ஞானமலது கதிகூடுமோ ’ எனவும் இவ்வாறெல்லாம் எழுந்த ஆன்றோர் திருவாக்குகள்    கண்டு தெளிக. அன்பாலும் அறிவாலும் ஈசனடிக் காட்படுவோரில் அன்பு அறிவினும் மிகுந்து நிற்கப்பெற்றவர் பக்தரெனவும், அறிவு அன்பினும் மிகுந்து நிற்கப்பெற்றவர் ஞானிகளெனவும் கூறப்படுவர்.  இவ்விருதிறத்தாருள் யான் ஒரு திறத்தாரினும் சேர்ந்தவனல்லேன் என்பார் ‘அடியானுமல்லன் ஞானியல்லன் ’ என்றார்.  ‘ ஞானியும் ’ எனற்பாலது உம்மை தொக்கு ஞானி என நின்றது.

(58)

59. கடவா ரணத்தின் உரிபோர்வை கொண்ட
        கருவேச! ஆதி முதல்வா!
    சடவா தனைக்குள் அவமேகி டந்து
        தடுமாறு நெஞ்ச முடையேன்
    அடைவாய் வழுத்தி வழிபாடு செய்துன்
        அடிபேண ஒன்றும் அறியேன் ;
    மடமால் அகற்றி யிடுமாற ளிக்கும்
        வரம்நீ கொடுக்கும் வரமே.

    மதத்தையுடைய யானையின் தோலைப் போர்வையாகக்கொண்ட கருவை யிலெழுந்தருளிய ஈசனே! ஆதியாகிய முதல்வனே ! சடமாயுள்ள பொருள்களின் பழக்கத்துள்