பக்கம் எண் :

68

திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி

வீணேகிடந்து தடுமாறா நின்ற மனத்தையுடையேன், முறையாக உன்னைத் துதிசெய்து தொண்டுபட்டொழுகி, உனது திருவடியை விரும்பச் சிறிதும் அறியேன்; (ஆதலால்) அறியாமையாகிய ஆணவமலத்தால்வரும் மயக்கத்தை அகற்றும் வண்ணம் கொடுத்தருளும் வரமே, நீ அடியேனுக்குக் கொடுக்கத்தக்க வரமாம்.

    கடம்-மதம்.  வாரணம்-யானை. உரி-தோல்.  சடம்-அறிவற்ற பொருள்கள்.  வாதனை-வாசனை-பழக்கம்.  அடைவாய்-முறையாய் ; ‘நூலடைவு’ என வருதல் காண்க.  மடம்-அறியாமை.  மால்-மயக்கம்.  அறிவை மறைத்து அறியாமையாகிய மயக்கத்தைச் செய்வது ஆணவமலமே யாதலின் மடமால் என்றது அறியாமையாகிய ஆணவமலத்தால் வரும் மயக்கத்தை.

    (கொடுக்கும்) வரம்-எழுவாய்; (அளிக்கும்)வரம்-பயனிலை.

60. வரையா தியற்றி யிடுபாவ காரி;
        மறமன்றி வேறு புரியேன்;
    விரைமா லைசுற்று குழலாரி டத்து
        மிகஆசை வைத்து மெலிவேன்;
    கரையா திருக்கும் மனநீக ரைத்துன்
        அடிபாட வைத்த கதைநான்
    உரையால் நிறைக்க முடியாது முக்கண்
        உடையாய்! களாவின் ஒளியே!

    (நன்று தீது என்பவற்றுள் தீதினை) நீக்காது, அதனைச் செய்யும் பாவமுடை யேன்; (ஆதலால்) அப் பாவத்தொழிலன்றி வேறு சிறிதுஞ் செய்யேன்; வாசமிக்க கூந்தலையுடைய பெண்களிடத்து மிகவும் ஆசைகொண்டு மெலியா நின்றேன்; திரிநேத்திரங்களை யுடையவனே! திருக்களாநிழற்கீ ழெழுந்தருளிய ஒளிப் பிழம்பே! உருகாதிருக்கும் என்மனத்தை நீ உருக்கி, உன் திருவடியைப்