பக்கம் எண் :

திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி

69

புகழ்ந்து பாடவைத்த கதையினை, நான் சொல்லால் அளவறுக்க ஒண்ணாது.

    வரையாது-நீக்காது. பாவகாரி-பாவமுடையேன்.  மறம்-பாவம்.  விரை-வாசனை.

    செய்தற்பாலது அறம்; நீக்கற் பாலது மறம்.  யானோ நீக்கற் பாலதையே செய்கின்றேன், செய்தற்பாலதை ஒரு சிறிதும் செய்கின்றிலேன் என்பார், ‘ வரையா தியற்றி யிடுபாவ காரி, மறமன்றி வேறு புரியேன்’ என்றார்.  ‘விரைமாலை சுற்று குழலார்’ என்றதால், ஆடவரை மயக்கித் தம் வலையிற் சிக்குவிப்பதே நோக்கமாகக் கொண்டு தம்மை நறுமலராகியவற்றால் அலங்கரித்துக்கொள்ளும் பரத்தையரே ஈண்டுச் சுட்டப்பட்டோரென்ப துணரப்படும்.                            (60)

ஏழாம் பத்து

முதற்சீரும் நான்காஞ்சீரும் விளச்சீர்களாகவும்
மற்றைய நான்கும் மாச்சீர்களாகவும் வந்த

அறுசீர் ஆசிரிய விருத்தம்.

61. ஒளிமதி முடித்த வேணி
        ஒருவனே ! கருவை யானே !
    தெளிவுறா நெஞ்சந் தன்னைத்
        தெருட்டிநின் நிலையைக் காட்டி
    அருளினா லென்னை யாண்ட
        அருட்குன்றே! உன்னை யின்னும்
    எளியனேன் பிறவி வேட்டோ
        ஏத்திடா திருக்கின் றேனே !

    ஒளிவாய்ந்த இளஞ்சந்திரனை யணிந்த சடாமுடியையுடைய ஒருவனே ! திருக்கருவையில் எழுந்தருளிய இறைவனே! தெளியாத என்மனத்தைத் தெளியச்செய்து, நீ அருளும் நிலையை (நீ கொண்டருளிவந்த ஆசிரியத் திரு