த
70 |
திருக்கருவைப்
பதிற்றுப்பத்தந்தாதி |
வுருவாற்) காட்டித் திருவருளினால்
என்னை யடிமை கொண்ட கருணாமலையே ! இன்னும் எளியேன், பிறவியை விரும்பியோ உன்னை வணங்காதிருக்கின்றேன்
!
தெருட்டி-அறிவுறுத்தி;
இறந்தகால வினையெச்சம்; தெருள் என்னும் தன் வினைப்பகுதி தெருட்டு என்னும் பிறவினைப் பகுதியாகி,
இறந்த காலங்காட்டும் இகரவிகுதி புணர்ந்து முடிந்தது. வேட்டு-விரும்பி; வேள்-பகுதி, டகரம்-இடைநிலை,
உ-விகுதி, ளகரம் டகரமானது சந்தி.
(61)
62.
இருக்கினும் நிற்கும்
போதும்
இரவுகண் துயிலும் போதும்
பொருக்கென நடக்கும்
போதும்
பொருந்தியே
துய்க்கும் போதும்
முருக்கிதழ்க் கனிவா
யாரை
முயங்கிநெஞ்
சழியும் போதும்
திருக்களா வுடைய
நம்பா !
சிந்தையுன்
பால தாமே.
இருக்கும்
பொழுதும், நிற்கும் பொழுதும், இரவில் நித்திரை செய்யும் பொழுதும், விரைந்து நடக்கும்பொழுதும்,
அறுசுவையோடு உணவு நுகருங்காலத் தும், முருக்க மலர்போன்ற இதழையும் கனி(போலும் இனியமொழிகள்
கூறும்) வாயையுமுடைய பெண்களைக்கூடி மனமழியும் பொழுதும், திருக்களா நீழலிலெழுந் தருளிய இறைவனே !
அடியேன் மனம் உன்னிடத்ததாம்.
பொருக்கென-விரைவுப்
பொருள்தரும் ஒரு குறிப்புமொழி. துய்த்தல் அனுபவித்தல்.
ஓரிடத்தமர்ந்து
இறைவனைச் சிந்தித்தலினும் நின்றுகொண்டு சிந்தித்தல் அரிது; அதனினும் அரிது படுக்கையிற்கிடந்து
சிந்தித்தல்; அதனினும் அரிது நடந்து கொண்டு சிந்தித்தல்; அதனினும்
|