பக்கம் எண் :

74

திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி

    நின் திருவருளாலே நீ காட்ட நின்னையும், நின்னையல்லா என்னையும்,    என்னை மயக்கியிருந்த மாயாகாரியங்களையும் கண்டேன் என்பார் ‘யாவையும் காட்டக் கண்டேன், என்னுளே நின்னைக் கண்டேன்’ என்றார். ‘என்னுளே     நின்னைக் காண்டல்’ பளிங்கிற் பதித்த சோதி காணுதல் போல்வதாம்.  நின்னை யன்றி அகிலம் வேறில்லையாதலால் நின்னைக்கண்ட எனக்கு ‘இனி மற்றோர் காட்சியுண்டோ’ என்றார். இறைவன் திருவருளின்றி அவனைக் காணுதல் இயலாதாகலின் ‘காட்டக் கண்டேன்’ என்றார். ‘அவனருளே கண்ணாகக் காண்பதல்லால்’ என்ற அப்பர் சுவாமிகள் திருவாக்கையும் காண்க.

(64)

65. உண்டென மறைக ளோதும்
        ஒருதனி முதலே ! நாளும்
    அண்டரும் முனிவர் தாமும்
        காண்கிலர்: அடியேன் உன்னைத்
    தெண்டிரை வளாகம் முற்றும்
        தேடினேன்; தேடித் தேடிக்.
    கண்டனன் களாவி னீழல்.
        கருவைமா நகரத் தானே!

    கருவை என்னும் பெரிய திருநகரத்தில் வாழ்கின்றவனே! உண்டென்று வேதங்கள் கூறும் ஒப்பில்லாத தனி முதல்வனே! எந்நாளும், தேவர்களும் முனிவர்களும் உன்னைக் கண்டறிகிலர்; நாயிற் கடைப்பட்டேனாகிய யான் உன்னைக் கடல் சூழ்ந்த உலகமுற்றும் தேடினேன்; அங்கு உன்னைத் தேடிக் காணாது, திருக்களா நிழலில் உன்னைத் தரிசித்தனன்.

    தெண்டிரை-(தெள்+திரை) தெளிந்த நீரையுடையதும் அலைவீசுவதுமான கடல்; திரை-அலை ;  தானியான இது தானமாகிய கடலுக்குப் பெயர் ஆனமையால் தானியாகுபெயர்.  வளா