பக்கம் எண் :

திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி

87

    (விஞ்ஞானகலர் பிரளயாகலர் சகலர் என்னும்) மூவகை யான்மாக்களை, மலபந்தத்தினின்று நீக்கி, குற்றமில்லாத முத்தியாகிய சோலையில், ஈசனும், மின்னலையொத்த இடையையுடைய உமையம்மைக்கு அன்பனும், தேவர்களுக்குத் தலைவனும் ஆகிய, குற்றமில்லாத பால்போலும் நிறத்தையுடைய இறைவன், (பேரின்பம் துய்த்து மகிழும்படி) சேர்ப்பான்.

    விஞ்ஞானகலர்-ஆணவமலம் ஒன்றுமே உடையோர்; பிரள யாகலர்-ஆணவம் கன்மம் என்னும் இருமலம் உடையோர்; சகலர்-ஆணவம் மாயை கன்மமென்னும் மும்மலங்களும் உடையோர்.  பாசம்-உயிர்களை அனாதியே பற்றிய மும்மலங்கள். பசு-ஆன்மா.  முத்தி-வீடுபேறு.  வனம்-சோலை.  மேய்த்திடும் என்பது ஈண்டு நுகரச்செய்யும் என்னும் பொருளது.  மின்னை நேர் இடைச்சி-மின்னலையொத்த இடையினை யுடையாள் (உமாதேவி); ஆசுஇல்-குற்றம் இல்லாத.  இனி இச் செய்யுளிற் கொள்ளக்கிடக்கும் பிறிதொருபொருள் வருமாறு :

    (மாடும் எருமையும் ஆடுமாகிய) மூவகைப் பசுக்களையும் கட்டவிழ்த்துக் கொண்டுபோய்க் குற்றமற்ற மூவகை யாகாக்கினி (வளர்வதற் கிடமாகிய) காட்டில் (அப்பசுக்களுக்குத்) தலைவனும், மின்னற் கொடியைப் போன்ற கோகுல மகளுக்குக் காதலனும், குற்றமில்லாத பாலமுதால் பொலிவுவாய்ந்த இடையர்களுக்குத் தலைவனுமானவன் மேய்த்திடுவான்.

    இப்பொருட்கு: பாசம்--கயிறு. முத்தீ முத்தியெனக் குறுக்கல் விகாரம்  பெற்றது.  வனம்-காடு.  ஈசன்-தலைவன்.  மின்னல், ஈண்டு மகளிரின் தோற்றத்துக்கு உவமையாயிற்று; இடைக்கன்று.  இடைச்சி-இடைமகள்.  அண்டர்-இடையர் ;  இதனை ‘அண்டரே பகைவர் வானோர் ஆயரென் றாகு முப்பேர்’ என்பதா லறிக.  பசுக்கள் மூவகையாதலை நம்பியகப் பொருளில் முல்லைக்கருப்