பக்கம் எண் :

திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி

89

    (விடயங்களிற்) கலங்கும் மனமே நீ துன்பம் அடையாதவண்ணம் ஒரு செய்தி சொல்லாநின்றேன்: வளம் அமைந்த செந்தமிழ் வழங்கும் திருக்கருவை யென்னும் அழகிய பெரிய திருப்பதியிலெழுந்தருளி விளங்கா நின்ற பால்போலும் வெள்ளிய நிறம் வாய்ந்த திருமேனியையுடைய சிவபெருமானுடைய திருவடியை வணங்கி னால், அளவுசெய்து காணுதற்கரிய சுவர்க்க வாழ்க்கையை, (அவன்) இப் பிறப்பிற் கொடுத்தருளுவான்.

துறக்கம்-முத்தியுலகம்.

    சிவபெருமான் திருவடித் தொண்டுபூண்டு ஒழுகுவார்க்கு முத்திவாழ்வு கிடைத்தல் ஒருதலையாதலின் ‘துறக்கவாழ் விம்மையின் அளிப்பான்’ என்றார்.  சீவன்முத்தர்நிலை இம்மையிற் கிட்டும் எனினுமாம். சீவன்முத்த ராவார் சிவனடியிலே திளைத்த சிந்தையராய்ச், சஞ்சித வினையொழிந்து, ஆகாமியவினை அணுகப்படாத வராய்ப், பிராரத்த உடலோடு நிலவும் ஞானியர்.  அவர் இம்மை யிலேயே பரமுத்தி யெய்துவர் என்பதனை ‘மும்மை தருவினைகள் மூளாவாம்; மூதறிவார்க்-கம்மையும் இம்மையே ஆம்’ என்னும் உமாபதி சிவாசாரியர் திருவாக்கினும் காண்க.

(81)

82. இம்மை இன்பமும் இறுதியின்
        முத்தியும் அளிக்கும்,
    நம்மை ஆளுடை நாயகன்
        கருவைநன் னகரிற்
    கொம்மை வெம்முலைக் கொடியொடும்
        இனி துவீற் றிருக்க
    விம்மி மானுடர் வெந்துயர்
        உழப்பதென் விரகே.

    இப் பிறப்பில் இன்ப வாழ்க்கையினையும், (இப்பிறவியின்) முடிவில் (பேரின்ப வாழ்க்கையான) முத்தியினையும்