பக்கம் எண் :

New Page 1

திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி

91

83. விரகி னாற்சிலர் செய்திடும்
        வினைகளும் உண்டோ ?
    மருவி அம்பாம் மறைந் துநின்
        றாட்டுவான் போல
    உரக கங்கணக் கருவையான்
        ஒருவன்நின் றாட்டப்
    பரவை சூழ்நில மன்பதைப்
        பரப்பெலாம் நடிக்கும்.

    திரைச் சீலையால் மறைவுபட்டு (அரங்கத்துள்) பொருந்தியிருந்து (அவை யார்க்குப் புலனாக அமைத்த பாவைகளைக் கயிற்றின்வழியே தன் இச்சைப்படி) ஆடச்செய்யும் பொம்மலாட்டிபோல, அரவினைக் கைவளையாக அணிந்த திருக் கருவைச் சிவபெருமான் ஒருவன் (மாயையாகிய திரையால் உயிர்களின் கட் புலனுக்குப் புலப்படாமல் சிதாகாயத்தில் மறைவுபட்டு) நின்று (மாயா காரியமாகக் கட்புலனாக அமைந்த உடலோடுகூடிய உயிர்களைக் கன்மத்தின் வழியே தன் இச்சைப்படி) ஆடச்செய்ய, கடல்சூழ்ந்த உலகத்திலுள்ள மக்கட் கூட்டமெல்லாம் ஆடாநிற்கும். (அவ்வாறாக அம் மக்களிற்) சிலர், தம்வயத்தராய்த் தத்தம்) அறி வினால் செய்யும் தொழில்களும் உண்டோ ?  (இல்லை).

    மருவி-பொருந்தி. அம்பரம்-சீலை, பரவெளி.  உரகம்-பாம்பு.  கங்கணம்-வளையல்.  பரவை-கடல்.  மன்பதை என்பதே மக்கட் பரப்பை யுணர்த்துமாயினும், மிகுதி யுணர்த்த ‘மன்பதைப் பரப்பு’ என்றார்; ‘ மன்பதை பைஞ்ஞீலி மக்கட் பரப்பே’ என்பது பிங்கலந்தை.  எல்லாம் என்னும் திணைப் பொதுப்பெயர் இடை குறைந்து நின்றது.

    இறைவன் இயக்கினாலன்றி உயிர்கள் இயங்கா என்பதனை,