பக்கம் எண் :

திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி

103

வான நோக்கத்தை வெளியிடுகின்றார்.  அஃதாவது, உடற்சுமை ஒழிதல், பத்தி உடைமை, சிவபெருமானது அருட்டிருக் கோலத்தைக் கண்ணாரக் காணுதல் முதலாயின.  இங்ஙனம் தமது முடிவான நோக்கத்தை அறிவித்து விட்டமையால், இனி அந் நோக்கத்தை நிறைவேற்றத் திருவுளம் இரங்கும் வகையில் சிவபெரு மான் திருவடித் தாமரைகளை வந்தித்து நிற்றலன்றிச் செய்யக்கடவது வேறெதுவும் இல்லையாதலின், அடுத்து வரும் இறுதிப்பத்து முற்றும் வணக்கமே கூறி முடிப்பர்.  ‘ அருளே திருமேனியாக உடையை யாதலால் என்மாட் டருள்கூர்ந்து யான் வேண்டிய திருக் காட்சியை நல்கி யருள்வாய்’ என்பது படக் ‘கருகு கண்டனே’ எனவும் ‘ கனியே ’ எனவும் விளித்தார் ; கருகு கண்டம் தேவர்க்கிரங்கி ஆலமுண்ட அருட்செயலையும், கனி கனிவுடைமையையும் குறித்து நிற்றலின்.  கனி உவமையாகுபெயர்.

(90)

பத்தாம் பத்து

முதலாம், மூன்றாம், ஐந்தாம், ஏழாம் சீர்கள்
மாச்சீர்களாகவும்
பிறவெல்லாம் விளச் சீர்களாகவும் வந்த

எண்சீர் ஆசிரிய விருத்தம்

91. கனிவு றாமனம் கனிய நின்பெரும்
        கருணை தந்தவா ! போற்றி. நாயினேன்
    இனிய பாடலால் களவின் ஈசனென்(று)
        ஏத்த நாத்தரும் இறைவ !  போற்றி.வான்
    பனிநி லாவுடன் கங்கை துன்றுசெம்
        பவள வார்சடைப் பரம !  போற்றி.வில்
    குனிவு றாமுனம் புரம்எ ரித்திடக்
        குருத்த வாள்நகைக் குழக !  போற்றியே.

    கனியாத (எனது) மனமும் கனியும்படி நினது பேரருளைத் தந்தவனே ! (உனது திருவடிகட்கு) வணக்கம்.  நாய்போற் (கடைப்பட்ட) யான் (உனக்கு) இனிய