பக்கம் எண் :

திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி

107

பந்த சுவாமிகள் தாம் திருவாய்மலர்ந்தருளிய தேவாரப் பதிக ஈறுகள் பலவற்றி னும் தம்மைச் சுட்டிக் கூறும்போது ‘ நற்றமிழ் ஞானசம்பந்தன் ’ எனவும், ‘தமிழ் ஞான சம்பந்தன் ’ எனவும், ‘ முத்தமிழ் நான்மறை ஞானசம்பந்தன் ’ எனவும், ‘ செந்தமிழான் ஞான சம்பந்தன் ’ எனவும் பிறவாறும் தமிழொடு தம்மைத் தொடர்புபடுத்திப் பேசுதலானும், ஆதி சங்கராசாரியர் இயற்றிய ‘ சௌந்தரியலகரி’ என்னும் வடமொழிநூலில் நம் சம்பந்தப் பெருமானார் ‘ திராவிடசிசு ’ எனச் சுட்டப்படுதலானும் ‘ செந்தமிழ்க் கவுணியன்’ என்றார்.  இங்ஙனமே இந்நூலாசிரியர் தாம் மொழிபெயர்த்தியற்றிய காசிகண்டத்துப் பாயிரத்துள்ளும், ‘ஏழ்நில வரைப்பு முய்ய ஈர்ந்தமிழ் மாரி பெய்த-காழிமா முகிலின் செய்ய மலரடி கருத்துள் வைப் பாம்’ என்றனர்.  இவ்வாற்றால் ‘ செந்தமிழ்’ என்பதனைக் கழுமலத்துக்கு அடை யாக்குதல் சிறப்பன்மையு முணர்க.          

(92)

93. கடையு கத்தினிற் பொழில்கள் ஏழையும்
        கனல்கொ ளுத்திய சுடலை யம்பலத்(து)
    அடலை பூசிஎன் அம்மை காணநின்(று)
        ஆடும் ஐயனே ! போற்றி, போற்றி.நெஞ்(சு)
    இடைவி டாமல்உன் சரண பங்கயத்(து)
        இருக்க நல்கிய இறைவ ! போற்றி.மால்
    விடையின் மேவியே கருவை மாநகர்
        வீதி வாய்வரும் விமல ! போற்றியே.

யுகங்கள் முடியும் (பிரளய) காலத்தில் ஏழுலகங்களையும் நெருப்பாய்நின்று எரித்தருளியதால் உண்டாகிய சுடுகாடாகிய பொது இடத்தின்கண் சாம்பலைப் பூசிக்கொண்டு என் அன்னை(யான உமாதேவி) காணும்படி நின்று திருக் கூத்தாடியருளும் ஐயனே ! வணக்கம், வணக்கம்.  (எனது) உள்ளம் உனது திருவடித் தாமரையின்கண் இடையறாது பதிந்திருக்க அருள்செய்த தலைவனே ! வணக்கம்.  பெரிய