த
திருக்கருவைப்
பதிற்றுப்பத்தந்தாதி |
111 |
னாய் ; பந்தமும் வீடுமாயதன்றி
அவற்றிற்கு மேற்பட்டோனுமாயினாய் ’ எனப் பொருள் தருதலின் உம்மைகள் இரண்டும் இறந்தது
தழீஇய எச்சவும்மை. சிவபெருமான் பந்தம் வீடு என்ணும் இரண்டிற்கும் மேலானவன் என்பது ‘ பந்தமும்
வீடும் ஆயபத பதார்த்தங்கள் அல்லான் ’ என்னும் சிவஞானசித்தித் திருவாக்கினும் பெறப்படுதல்
காண்க. தமிழ்மொழிக்கு ஆதியிலக்கணம் செய்தவராதலால் அகத்தியர் தமிழ்முனி எனப்பட்டரர்.
‘ அழகு போற்றி ’ என்பதில் போற்றி என்பதை வியங்கோளாகக் கொண்டு பொருள் கூறுக ; ஈண்டுப்
போற்றுதல் புகழ்தல்.
‘அழக போற்றி’ எனவும் பாடம் கொள்வர்.
(95)
96.
ஆதி நின்திருத்
தொண்டு காதலித்(து)
அறிவு சென்றமட்
டாக நின்புகழ்
ஓது செய்யுளிற்
குறையு ரைத்ததிங்(கு)
ஒன்றும் நின்செவிக்(கு)
உற்ற தில்லையோ ?
காதல் நண்புடைக்
கவிஞன் ஏவலும்
கங்கு லிற்கழற்
கால்சி வப்புறத்
தூது சென்றவா !
போற்றி. நாடொறும்
தொழும வர்க்கருள்
கருவை ஐயனே !
நாள்தோறும் (உன்னை)
வணங்குகிறவர்களுக்குத் திருவருள் செய்யும் திருக்கருவைக் கடவுளே ! ஆசைத் தோழமை பாராட்டிய
(சுந்தரமூர்த்தி என்னும்) பாவலர் ஏவியவுடனே, வீரக்கண்டை அணிந்த நின் திருவடிகள் சிவக்க இராப்போதில்
தூது சென்றவனே ! வணக்கம். உன் திருவடித் தொண்டை விரும்பி, (அவ்விருப்பம் எழுந்த நாள்) முதலாக
(இன்று வரையும்) என்னுடைய (அற்ப) அறிவு சென்ற அளவாக உன்னுடைய புகழை(ப் பாடுதல் காரணமாக
யான்) பாடிய பாக்களில் (என்னுடைய) குறைகளையும் (பலமுறை உரைத்தேன். அங்
|