த
34 |
திருக்கருவைப்
பதிற்றுப்பத்தந்தாதி |
அருமை அளவிடற் கரியது.
அவ்வுடம்பைப் பகுந்தளித்த பெருங் கொடையாளி என்பது தொனிக்கக் ‘கடவுளர் காணாத உருவைப்
பகுந்தளித்தவன்’ என்றார். நண்ணினர்க்கு எளியனும் நண்ணார்க்குச் சேயோனுமாதலால் ஒன்னலர்
புரமெரித்த அவனே என் பிழைபொறுத்துத் திருவளித்தான் என்றார். பிழையாவன ‘கல்லாப் பிழையும்
கருதாப் பிழையும் கசிந்துருகி நில்லாப் பிழையும்’ முதலாயின. அழியாத செல்வமாவது சிவஞானச்
செல்வம். மற்றைய செல்வங்களெல்லாம் அழிவுடைசெல்வங்கள். ‘இருவே றுலகத் தியற்கை:
திருவேறு;-தெள்ளியராதலும் வேறு’ என்று நாயனார் திருவாய் மலர்ந்தருளியவாறு ஞானச்
செல்வம் உடையார்க்கு இம்மைச் செல்வங்கள் இலவாதலும், இம்மைச்செல்வங்கள் உடையார்க்கு
ஞானச் செல்வம் இலதாதலும் பெரும்பான்மையான உலக இயற்கை. அவ்வியற்கை மாற எனக்கு இருவகைச்
செல்வங்களும் கொடுத்தான் என்பார் ‘ அழியாத திருவை அம்புவிச் சிறப்பொடும் அளித்தவன்’
என்றார்.
(25)
26.
உடையர் என்றுதம்
மக்களை மனைவியை
ஒக்கலைப்
பெருவாழ்வை
அடைய நல்குசீர்ச்
செழும்பொருள் முதலிய
அனைத்தையும்
நினைப்பாரோ
விடையின் மேல்வரு
திருக்களா நாயகன்
விரைமலர்ச்
செழுங்கொன்றைத்
தொடையல்
வேணியான் அடியவர்க் கன்பொடு
தொண்டுசெய்
மனத்தாரே.
இடபவூர்தியின் மேல்
எழுந்தருளும் திருக்களாநிழலில் அமர்ந்தருளிய இறைவனும், வாசனைவாய்ந்த தளிர்த்த
கொன்றைமலரால் தொடுத்த மாலையை யணிந்த சடா முடியையுடையவனுமாகிய சிவபெருமானது அடியார்களுக்கு
அன்போடு வழிபாடு செய்யும் மனத்தையுடையவர், மக்களையும் மனையாட்டியையும் சுற்றத்தாரையும்
(வளமை)
|