த
36 |
திருக்கருவைப்
பதிற்றுப்பத்தந்தாதி |
முல்லை நிலத்திற்குரிய
துளபமலர் மாலையணிந்த மேகம் போன்ற நிறமுடைய திருமால் வணங்கும் திருக்கருவைப் பதியில்
வாழும் புண்ணிய வடிவாயுள்ளவனும், இளைஞரான மார்க்கண்டேய முனிவருக்காகக் கோபித்த இயமனை உதைத்தவனுமாகிய
இறைவனது தாமரை மலரையொத்த செவ்விய திருவடிகளை வணங்காயென்று, எனது மனத்தை யான் நாடோறும்
வணங்கிக் குறையிரப்பேன்.
மின்என-மின்னல்போல.
வைகலும்-நித்தமும். புனம்-(முல்லைநிலச்) சோலை. துழாய்-துளபம்; முல்லைநிலக் கருப்பொருள்களுள்
ஒன்று. முகில்-மேகம். பாலன்- குழந்தை; மார்க்கண்டர் பதினாறு வயதினராய்ச் சிவபெருமானை அடைந்தன ராதலின்
பாலன் எனப்பட்டார். சினத்த-கோபித்த. காலன்-யமன். பங்கயம்-தாமரை.
‘ ஆசையின்
’-ஐந்தாம் வேற்றுமை ஏதுப்பொருளது. ‘ தளராமே’-மேஈற்று எதிர்மறை வினையெச்சம்.
இறுதியும் முதலும்
பூட்டிட்டாற்போல இணைந்து பொருள் தருதலின் இச்செய்யுள் பூட்டுவிற் பொருள்கோள் உடையது.
(27)
28.
வணங்கெ னத்தலை
அளித்தனை; நின்புகழ்
வாழ்த்தென
நாத்தந்தாய்;
இணங்கெ னத்திருக்
கூட்டமுங் காட்டினை;
இனிப்பெறும்
பேறுண்டோ!
துணங்கை யிட்டுவெம்
பேய்க்கணங் குதித்திடச்
சுடலைஆ டரங்காகக்
கணங்கள் போற்றநின்
றாடிய குழகனே!
கருவையெம் பெருமானே!
கொடியபேய்களின் கூட்டம்
துணங்கைக் கூத்தாடிக் குதிக்க, சிவகணங்கள் துதிக்க, (சர்வசங்கார வெளியாகிய) மயானம் ஆடும்
நாடகமேடையாக நின்று, ஆடிய சிவ
|