த
திருக்கருவைப்
பதிற்றுப்பத்தந்தாதி |
55 |
பழிச்சிடுவேன்
எனற்பாலது பழித்திடுவேன் என நின்றது, சகரத்துக்குத் தகரம் போலியாதலின்.
பழிச்சல்-துதித்தல் ‘பழுத்திடுவேன் ’ என்பதும் பாடம். இடு, தகு, வரு என்பன துணை வினைகள்.
(46)
47.
நம்பியுன
தருள்வேட்டு
நடுக்கடலுட்
கலங்கவிழ்த்து
வெம்புதுயர்
மனத்தார்போல்
மெலிகின்றேன் நெடுநாளா ;
கும்பமுனிக்
கருள்புரியுங்
கொற்றவனே
! முகலிங்கா !
தும்பைமுடித்
தோய்!புரக்க
இரக்கமின்னந் தோன்றாதோ !
அகத்திய
முனிவருக்கருளிய வெற்றியை யுடையவனே! முகலிங்கனே! தும்பை மலரை முடியிற்சூடியவனே! உனது திருவருளை ஒரு
பற்றுக்கோடாகக்கொண்டு, அதனை விரும்பி, கடல் நடுவுள் தமது மரக்கலத்தைக் கவிழ்த்து, அதனை
மீட்டும் பெறவருந்தும் துன்பம் வாய்ந்த மனத்தையுடையவர்போல, நெடுநாளாக மன மெலி கின்றேன்;
என்னைப் பாதுகாக்க இன்னமும் திருவுள்ளத்தில் இரக்கம் வராதா ? (வரவேண்டும் என்பது கருத்து.)
கலம்-கப்பல்.
‘கலத்தினுங் காலினுந் தருவன ரீட்ட’ என்றார் பிறரும். கும்பமுனி-அகத்தியர்.
தும்பை-தும்பைமலர்.
விரைவிற்
கரைசேர்க்கவல்ல புணை ஒன்றைக் கண்டு அதை அடைய விரும்பித் தாம் செல்லும் கலத்தைக்
கவிழ்த்தார்போல, யானும் உனது திருவருளாகிய புணையைக் கண்டு அதுகொண்டு விரைவிற்
கரைசேரலாமென்று நம்பி அதை அடைய விரும்பியான் பற்றாகப் பற்றியிருந்த இவ்வுலகப்
பற்றுக்களையெல்லாம் விட்டொழித்தேன். ஆயினும் இன்னும் உன் திருவருட்புணை என் கைக்கெட்டிலது.
நெடுநாளாய் வருந்துகின்றேன். ஆதலால்
|