த
திருக்கருவைப்
பதிற்றுப்பத்தந்தாதி |
63 |
உன் அடியார்,
வினைத்தொகை.
தொழும்பினாலும்
தவத்தினாலும் யோகத்தினாலும் பக்தியினாலும், முறையே சிவபெருமானடிக்குப் பாத்திரரான அடியார்,
தவசியர், யோகியர், பக்தர் என்னும் இத்திறப்பட்டோர்க்குச் சிவபெருமான் திருவடி இத்திறப்படுமென்பது
இச்செய்யுள். அடியார் முதலான அனைவோரும் விழைவது முத்திப்பேறே யாதலின் அம்முத்திப் பேற்றுக்கு
மூலமாயிருப்பது திருவடியென்பதை முதற்கண் கூறினார்.
தவயோகிகள் என்பதனைக்
‘ கபிலபரணர் ’ என்பதுபோலக் கொள்க. ‘தவசிகட் கும் யோகிகட்கும் முறையே கன்னலும் அமிர்தமுமாய்’
எனப் பொருள் படுதலின் இது நிரனிறைப்பொருள்கோள். திருவடிக்குவமை அவரவர் தன்மைக் கேற்ப வேறுபடுமாறு
கூர்ந்து நோக்கிக் கண்டுகொள்க.
‘தெளிகன்ன லூறுமிரதம்’
என்பதும் பாடம். இரதம்-இரசம்.
எண்சித்திகளாவன-அணிமா,
இலகிமா, கரிமா, பிராப்தி, பிராகாமியம், ஈசத்து வம், வசித்துவம். திருவடி ஒன்றையே பலவாகவுருவகஞ்
செய்தமையால் இஃது ஏகாங்கவுருவணி.
(54)
55.
அடியா ரிழைத்த
பிழைகோடி நெஞ்சின்
அறியாத ஆதி
முதல்வன்,
கொடியார் புரத்தை
அழல்மூட அன்று
குறுமூரல் கொண்ட
குழகன்,
நெடியோன்
வழுத்து களவீசன் என்று
நினைதோறும்
உள்ளம் நெகிழ
முடியேறும் அங்கை;
புளகிக்கும் மேனி;
முகிழிக்கும் என்கண் இணையே.
தன தடியவர்செய்த அளவில்லாத
பிழைகளைத் தனது திருவுளத்தி லெண்ணாத ஆதியாகிய முதல்வன், தமது அடிமைத் திறத்தினின்றும் மாறுபட்ட கொடியவர் திரி
|