த
84 |
திருக்கருவைப்
பதிற்றுப்பத்தந்தாதி |
அமைக்கும் குயவனது
சுழன்றாடும் சக்கரத்தையொத்து விடயங்களில் அலைந்து செல்லும் எனது மனமும், (தான் அங்ஙனம் செல்லுதலால்
நேருங்) கவலையைச் சீர்தூக்கி, அதனைப்போக்க உன்னைச் சரணடையுமோ. (அறியேன்.)
திகிரி-சக்கரம்.
மட்கலத்திகிரி, மட்கலத்தை அமைக்கும் சக்கரம் என உருபும்பயனும் உடன்தொக்க தொகையாகக்கொள்க.
மட்கலம் என்பதும் மண்ணாலாகிய குடம் என உருபும் பயனும் உடன் தொக்கு தொகையாம். ஓகாரம்
வினாப்பொருட்டு. ஒத்து, ஓர்ந்து-இறந்தகால வினையெச்சங்கள். ஓ-உலமவுருபிடைச் சொல்லடியாகப்
பிறந்த பகுதி, தகரமெய் இடைநிலை, தகரமெய் சந்தி, உ எச்ச விகுதி. ஓர்-வினைப்பகுதி,
தகரமெய் இடைநிலை, தகரமெய் தோன்றி நகரமானது சந்தி, உ எச்சவிகுதி.
(75)
76.
ஈச னே!இடத் திமய
வல்லியின்
நேச னேயியற்
கருவை நித்தனே !
பூசி யேனுனைப் புனித
ஆகமம்
வாசி யேன்பிறப்
பென்று மாயுமே.
எல்லாவற்றையும்
ஆள்பவனே! இடப்பாகத்திலுள்ள உமையம்மையினிடத்து அன்புள்ளவனே, ஒழுங்கமைந்த கருவையிலெழுந்தருளிய
நித்தனே ! உன்னைப் பூசித்திடேன்; தூய சிவாகமத்தை வாசித்தல் செய்யேன். எக் காலத்து என்
பிறவி யொழியும்? (கூறியருளாய்.)
இயல்-ஒழுங்கு.
புனித-தூய.
உயிர்களிடத்துக்
கருணை யுள்ளானென்பார் ‘இடத்திமய வல்லியின் நேசனே’ என்றும், என்றும் அழிதலில்லாதவனென்பார்
‘நித்தனே’ என்றும் கூறினார். ‘வேதம் பசு, அதன்பால் நல்லாகமம்’ என்பவாதலின் ‘புனித ஆகமம்’
என்றார். ‘பூசியேன்’ என்பதால் பத்தியில்லேன் என்றும், ‘ஆகமம் வாசியேன்’ என்பதால் ஞானமில்லேன்
என்றும் கூறினராவர். சிவபத்தியும் சிவஞான
|