பக்கம் எண் :

திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி

95

வீற்று அஃறிணைப் பன்மை முற்றென்று கொள்வாரு முளர்.  அவற்று-அவற்றால் ; அவ் என்னும் வகரவீற்றுச் சுட்டுப் பெயர் அற்றுச் சாரியை பெற்றுக் கருவி வேற்றுமை உருபு தொக்கு நின்றது.  பானிற வண்ணன்-பால்வண்ணன் எனப் பொருள்பட்டு ஒரு சொல் நீர்மைப்படும்.  உண்டோ, உளதோ என்பவற்றில் ஓகாரம் எதிர்மறைப் பொருளன.

    பிறவியாற் பெறத்தக்க பயன் வீடுபேறு.  இப் பிறவி எடுத்தமையே கடந்த பிறவிகளால் வீடுபேற்றை எய்தியதில்லை என்பதற்குக் கண்கூடான சான்றாமாதலின், முன் எடுத்த யாக்கைகள் இறந்தொழிந்தனவே யல்லாமல் அவற்றால் எய்திய பயன் யாதுமில்லை என்றார்.  பால்வண்ணநாதனை இடையறாது சிந்தித்திருக்கும் அறிவு இந்த யாக்கையிலே நிகழக் காண்டலினாலும், அச் சிந்தனையே வீடுபேற்றை எய்துவிக்கும் என்பது ஒருதலையாதலினாலும் இதுவே பயன் தந்த யாக்கை என்பார், ‘ சிறந்த யாக்கை ஈது ’ என்றார்.  ஆன்மாவை வீடு பெறுவித்துத் தானழிவதே யாதலின் ‘ இதற்கு நான் செய்வதும் உளதோ ’ என்றார்.

(85)

86. உள்ள தில்லதென் றுரைத்திடும்
        பொருளையுய்த் துணராக்
    கள்ளர் நாவினில் இருந்திடாக்
        களாநறுங் கனியைத்
    தெள்ளு செந்தமிழ்க் கருவையிற்
        சினகரம் புகுந்து
    மெள்ள நான்சென்று காண்டலும்
        தீர்ந்தது விடாயே.

    உள்ளதென்றும் இல்லதென்றும் (நூல்களாற்) கூறப்படும் (உண்மைப்) பொருளைத் (திருவருள் விளக்கத்தாற்) கூர்ந்து உணரமாட்டாத வஞ்சகர் நாவிற் பொருந்தாத, திருக்களாநீழலில் அமர்ந்த இனிய கனிபோன்ற (சிவபெருமானைத்) தெளிவும் செம்மையும் வாய்ந்த தமிழ்மொழி