த
திருக்கருவைப்
பதிற்றுப்பத்தந்தாதி |
99 |
நடக்கும் என்றது ஈண்டுப்
பொதுவாய்த் தொழில் நிகழ்த்துவதைக்
குறிக்கும் ; காலால் நடத்தல் ஒன்றையே யன்று. ‘ நடிக்கும் என்பதும் பாடம். உடல் சூத்திரப்
பாவைபோல் இயக்கப்படுதலை 38-ம் செய்யுளுரையிற் கண்டு தெளிக. உழலல்-வருந்தல், சுழல்தல்.
கடத்தல்-சென்றொழிதல்.
முன் நின்ற ஐகாரங்கள்
ஐந்தும் அழிக்கப்படு பொருளில்வந்த இரண்டாம் வேற்றுமை யுருபு ; ஒன்று பலவடுக்காய் வந்தன.
ஆளுவை-என்பதில் ஐகாரம் முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி ; உகரம் சாரியை ; வகரவொறறு இடைநிலை.
மாசறத் துலக்கி
அழகுற வைத்துப் போற்றப்படும் உண்கலன் உணவிட்டு உண்டபிறகு எச்சிலென்று இழித்தொதுக்கப்படுதல்
போல, உண்டியும் உடையும் அணியுஞ் சாந்தும் இட்டுப் போற்றப்படும் உடல் இருவினை நுகர்ச்சிக்கு
இடமாகி அவ் வினை நுகரப் பட்டபிறகு இழித்தொதுக்கப்படுமாதலின் ‘ விளிந்தபின் தீண்டாத் துடக்கை
’ என்றார். பிறப்பை அஞ்சியே இறப்பை அஞ்சுவர் மெய்யுணர்வுபெற்ற ஞானிகள். ‘ யானேதும் பிறப்பஞ்சேன்
இறப்பதனுக் கென்கடவேன் ’ என்றார் திருவாதவூரடிகள். காரைக்காலம்மையார் ‘ பிறவாமை
வேண்டும் ; மீண்டும் பிறப்புண்டேல் உன்னையென்றும் மறவாமை வேண்டும் ’ என்றார். ஆதலின்,
இவ்வுடலை ஒழிக்கத் துணிவது, பிறப்பறுத்து என்னை நீ ஆட்கொள்வாய் என்ற உறுதியாற்றான் என்பார்
‘ நீக்கி என்று ஆளுவை ’ என்றார்.
(87)
88.
உத்தி
வாளரா முடித்தபால்
வண்ணனே
! உனது
பத்தி வேண்டுவ
தன்றியே
நரகிடைப்
படினும்
முத்தி வேண்டிலேன்;
துறக்கமும்
வேண்டிலேன்
முனிவர்;
சித்தி வேண்டிலேன்
; வேண்டிலேன்
திசாதிபர்
சிறப்பே.
|