ழுகிளி புரவி' என்றது இங்கு அறிதற்பாலது. மதன் உலகத்தார்க்குக் காதலையுண்டாக்கி இன்பத்தைக்கொடுக்கும் தெய்வம் ; அத்தெய்வத்தைத் தாங்கி வருவதால் நீ இன்பஞ் செய்வாய் என்ற கருத்து விளங்க ழுஇன்பம் செய்யும் கிளியரசேழு என்றார். ழுசீர் கொண்ட வையம் படைக்கும் அதனையும்ழு எனப் பிரித்தாற், சிறப்புப் பொருந்திய உலகத்தை உண்டாக்கும் அத்தொழிலையும் நீ மேற்கொண்டாய் என மற்றும் ஒருபொருள் வெளிப்படுவது காண்க. காக்குங் கடவுள் ஆகிய திருமாலின் பெயரையும் கொண்டு அவர் பாயல் நிறத்தையுங்கொண்டு காமனுக்குப் புரவியாகி அவனை மேற்கொண்டு எல்லாவுலகங்கட்கும் இன்பத்தைத் தருகின்ற கிளியரசே ! நான் ஒன்று சொல்ல, நீ அதனைக் கேள் என வினை முடிவு செய்க. 2,3 : வையம் எலாம் ....... கேளாதவர் ஆர்காண் கிள்ளையே (சொ - ள்.) கிளியே ! உலக முழுவதிலும் மன்மதன் ஆட்சி செலுத்துதல் என்னும் இன்பம் தோன்றுவதற்கு உன் சொல்லைக் கேளாதவர் யார்தாம் உளர்? (ஒருவரும் இலர்.) (வி-ம்.) ழுயானை யிரதம் பரியா ளிவையில்லை, தானு மனங்கன் றனுக்கரும்பு - தேனார், மலரம்பினால் வென் றடிப்படுத்தான் மாரன், உலகங்கள் மூன்றும் ஒருங்கு' என்றபடி மூவுலகத்தும் வேள் ஆணை செல்லும் என்பதுதோன்ற ழுவையம் எலாம்ழு என்றார். ஆண்மை-ஆட்சி, இது காமவின்பத்தைக் குறித்தது. அவன் ஆட்சியால் விளைவது அதுவே யாதலின், மக்களுக்குக் காமவின்பம் தோன்றியபோது கிளியின் சொல்லைக்கேட்டு மகிழ்வர்; காதலர்க்குக் கிளியின் சொல் இன்பத்தை விளைக்கும் ஆதலான் ழுகேளாதவர் ஆர்ழு என்றார். ழுஉலகமெல்லாம் வேளாண்மைத் தொழில் ஆகிய பயிர் விளைச்சலுக்கு நின் வார்த்தை கேளாதவர் ஆர்ழு என வெளிப்பொருள் ஒன்று தோன்றுவதும் காண்க. 3-5 : நாளும் மலைத்திடும்.......பரி ஏழும் உனக்கு எதிரோ (சொ - ள்.) ஒவ்வொரு நாளும் மக்களைப் போர் செய்து வருத்தும் மன்மதன் ஒரு சக்கரமுமில்லாமற் செலுத்துகின்ற காற்றாகிய தேரினை முற்றும் எழுச்சியுடன் பலமாயிழுத்துக் கொண்டு திரிகின்ற பச்சைப் புரவியே! முற்காலத்திலிருந்து சூரியன் தேரினை இழுத்துத் திரிகின்ற | | |
|
|